திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று மாலை 6 மணிக்கு நகரின் மையப் பகுதியில் உள்ள மலை உச்சியில் கார்த்திகை மாகாதீபம் ஏற்றப்பட்டது.
கொரோனா காரணமாக முதல் முறையாக பக்தர்கள் இன்றி தி. மலையில் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது. 1,500 கிலோ நெய் மற்றும் 1,000 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக நேற்றில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவில் முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
கோவிலை சுற்றி பேரிகார்டுகள் மூலம் போலீசார் தடுப்பு அமைத்து உள்ளனர். மேலும் கோவில் சுற்றி மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று கோவிலில் பக்தர்கள் நடமாட்டம் உள்ள அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாய் மூலம் சோதனை செய்யப்பட்டது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டது.
திருண்ணாமலை நகர பகுதியில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும், நாளையும் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் மூலம் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர்.