மொபைல் போன் பேட்டரிகள் சேதமடையாமல் இருப்பதற்கு சார்ஜ் செய்யும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று ஒவ்வொருவரின் கையில் மிகசும் சுலபமாக ஸ்மார்ட்போன்கள் உலாவருகின்றது. மேலும் இந்த போன்களில் பலமணிநேரத்தினை மிகவும் சுலபமாக கழித்து வருகின்றனர்.
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரும் அடிமையாகிவரும் இந்த போனில் பேட்டரி தான் போனின் ஆயுளைக் குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம் சரியாக சார்ஜ் செய்யவில்லை என்றால் போனின் ஆயுள் குறைந்துவிடும். அதற்கான தீர்வினை இந்த பதிவில் பார்க்கலாம்.
மொபைல் போன் சார்ஜ் செய்த பின்பும் மின்சாரத்துடன் இணைத்து வைக்கக்கூடாது. இதனால் பேட்டரியின் ஆயுள் குறைவதுடன், போனுக்கு பாதிப்பும் ஏற்படுகின்றது.
பேட்டரி ஆரோக்கியத்தினை சரியாக பராமரிக்க நீங்கள் விரும்பினால், 20 சதவீதம் சார்ஜ் இருக்கும் போதே போனை சார்ஜ் செய்ய வேண்டும்.
பின்பு 80 முதல் 90 சதவீதம் வந்த பின்பு சார்ஜ் செய்வதை நிறுத்திவிட்டு, இணைப்பை துண்டித்துவிட வேண்டும்.
ஏனெனில் 0 சதவீதத்திலிருந்து போனை சார்ஜ் செய்தால் பேட்டரி அதிகம் சூடாகிவிடும், மேலும் 80 சதவீதத்திற்கு மேல் இருக்கும் போது சார்ஜில் வைத்தால், போனின் செயல்திறன் மற்றும் பேட்டரியின் செயல்திறன் குறைந்துவிடும்.
போன் போட்டரிகள் சேதமடையாமல் இருப்பதற்கு குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.
சில போன்களில் பேட்டரி அதிகமாக சார்ஜ் ஆவதால் பெரிய ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது. ஏனென்றால் சில ஃபோன்களில் முழுமையாக பேட்டரி சார்ஜ் ஆன பின்னர், தன்னிச்சையாக சார்ஜிங்கை துண்டித்து விடும் அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.