இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும்போது மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள, தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. என்றாலும் இன்னும் 6 மாதத்திற்கு பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என உத்தவ் தாக்கரே மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்திய அரசு விமான சேவையை ரத்து செய்துள்ளது.
25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை, அதையொட்டி புத்தாண்டு விழா வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதிலும் உள்ள முக்கியமான நகரங்களில் நாளை முதல் ஜனவரி 5-ந்தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் நபர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.