பொதுவாக இளம் பருவத்தில் இருப்பவர்கள் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்தை பார்ப்பதற்காகவும், அதனை மகிழ்ச்சியுடன் ஆரம்பிப்பதற்காகவும் திருமணம் செய்து கொள்வார்கள்.
அதில் சிலர் காதல் திருமணம் செய்து கொள்வார்கள், இன்னும் சிலர் வீட்டில் பார்க்கும் பெண்கள் அல்லது ஆண்களை திருமணம் செய்து கொள்வார்கள். திருமண வாழ்க்கை நாம் நினைத்தது போன்று அல்லாமல் சிலருக்கு வேறு விதமாக அமைந்து விடுகிறது.
திருமணம் செய்த அனைத்து தம்பதிகளும் மகிழ்ச்சியாகவும், ஆதரவாகவும் வாழ்வதில்லை. ஜோதிட சாஸ்திரம் கூறுவது போன்று திருமணத்திற்கு பின்னர் சில பெண்கள் தன்னுடைய கணவரை அடிமையாக நடத்துவார்களாம். இவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அதிக உக்கிரமானவர்கள், பிடிவாதமானவர்கள் அல்லது உணர்ச்சிரீதியாக தீவிரமானவர்களாக இருப்பார்கள். இது அவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு பிரச்சினையாக அமைந்து விடும். சில சமயங்களில் திருமண வாழ்க்கை விவாகரத்தில் கூட முடியலாம்.
அந்த வகையில், திருமணத்திற்கு பின்னர் கணவர்களிடம் ஆக்ஷ்ரோஷமாக நடந்து கொள்ளும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
மேஷம் | மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். துணையின் மீது தீராத காதல் கொண்ட இவர்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொள்ளமாட்டார்கள். எந்தவொரு விடயத்தையும் வெளிப்படையாக பேசும் இவர்களிடம் குடும்ப நடத்துவது மிகவும் கடினம். இவர்களின் சொற்கள் யாரையும் கஷ்டப்படுத்தினாலும் அதனை பெரிதாக கண்டு கொள்ளமாட்டார்கள். இயல்பாக அமைதியான விவாதங்கள் செய்து கொண்டே இருப்பார்கள். இந்த பழக்கம் சில சமயங்களில் பிரச்சினையாக அமைந்து விடலாம். நீண்ட நேரம் வெறுப்புணர்வை வைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் அடிக்கடி சண்டையிடுவார்கள். |
சிம்மம் | சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தொடர்ச்சியாக கவனம் செலுத்துவார்கள். எந்தவொரு உறவிலும் நடக்காத விடயங்களை இவர்கள் கவனித்து சண்டை போடுவார்கள். தற்பெறுமை கொண்டவர்களாக இருப்பதால் அடிக்கடி சண்டை போடுவார்கள். கற்பனை செய்ய முடியாத சூழ்நிலைகளை உருவாக்கும் பழக்கம் இவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு பிரச்சினையாக அமையும். அக்கறையின்மை காரணமாக துணை மீது அதிக கோபம் கொள்வார்கள். |
விருச்சிகம் | விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் துரோகம் செய்யப்பட்டதாக உணர்ந்து தன்னுடைய துணையை காயப்படுத்துவார்கள். சண்டைகள் மிகவும் தீவிரமாக போடுவார்கள். துணையின் மனதில் இருப்பதை ஆழமாக பார்த்து அதன் பின்னர் தன்னுடைய வாதங்களை ஆரம்பிப்பார்கள். நேர்மையையும், விசுவாசத்தையும் விரும்பும் குணம் இவர்களிடம் இருக்காது. ஒவ்வொரு சண்டைக்குப் பிறகும் காதல் அதிகரிக்கும். |