ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள், நேர்மறை எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் நண்பராக இருக்கும் போது சிறந்த நண்பராகவும் எதிரிகளிடம் மிகவும் மோசமான எதிரிகளாகவும் இருப்பார்களாம். அப்படிப்பட்ட விசித்திர குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த பெரிதும் தயக்கம் காட்டுவார்கள்.
இவர்கள் பெரும்பாலும் கணிக்க முடியாத நடத்தையை கொண்டிருப்பார்கள். மிகவும் நெருக்கமான உறவுகளுக்கும் கூட இவர்களை புரிந்துக்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும்.
இவர்களால் ஒரே நேரத்தில் ஒருவருடன் பாசமாகவும் இன்னொருவருடன் கோபமாகவும் நடந்துக்கொள்ள முடியும். இவர்கள் நண்பனுக்கு சிறந்த நண்பனானவும், எதிரிக்கு கொடூரமான எதிரியாகவும் இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே பூரணத்துவத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் ஒரே சமயத்தில் சிறந்த நண்பராகவும், அதேசமயம் மோசமான எதிரியாகவும் இருக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.
நல்லவர்களிடம் இவர்களின் நல்ல பக்கத்தை காட்டுவதை போன்று, அவர்களுக்கு தீங்கு செய்பவர்களை கண்டுப்பிடித்துவிட்டால் மோசமான எதிரியாக மாறிவிடுவார்கள்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே கருணை உள்ளம் கொண்டவர்களாகவும், சமாதானத்தை விரும்பும் நபர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் அவர்களுக்காக உயிரையும் கொடுக்கும் நல்ல ஆன்மாக்களாக அறியப்படுகின்றார்கள்.
ஆனால் இவர்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு மோசமான எதிரியாக மாறிவிடுவார்கள்.