பொதுவாக பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன.
மற்ற உணவுகளை விட மனிதர்களுக்கு ஆரோக்கியம் தருவதில் பழங்கள் இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
அந்த வரிசையில் கொய்யாப்பழங்கள் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய பலன்களை தருகின்றது. ஏனெனின் கொய்யாப்பழங்களில் ஏராளமான பைட்டோநியூட்ரியன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ஏகப்பட்ட பலன்கள் இருந்தாலும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் என வரும் முழுமையான நிவாரணத்தை பெற்றுக் கொள்ள முடிகிறது.
அந்த வகையில் கொய்யாப்பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. மற்ற பழங்களை விட கொய்யாப்பழத்தில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன. அத்துடன் கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. அதிலும் குறிப்பாக 100g கொய்யாவில் சுமார் 300mg அஸ்கார்பிக் அமிலம் (வைட்டமின்-சி) உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2. கொய்யாப்பழத்தில் ஏராளமான பைட்டோநியூட்ரியன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது நமக்கு ஏற்படும் பல்வேறுப்பட்ட உடல்நல பிரச்சினைகளிலிருந்து எம்மை பாதுகாக்கும். சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அடிக்கடி வரும். அப்படியானவர்கள் அடிக்கடி கொய்யாப்பழம் சாப்பிட்டலாம்.
3. வயிறு மற்றும் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு கொய்யா உடனடி தீர்வு கொடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
4. நாம் சாப்பிடும் மற்ற பழங்களை விட கொய்யாப்பழத்தில் அதிகமான நார்ச்சத்து உள்ளது. இதனால் செரிமானம், வயிற்றுக்கோளாறு பிரச்சனைகளுக்கு கொய்யாவை சாப்பிடலாம். சிலருக்கு கொய்யாப்பழத்தை விதையுடன் சாப்பிடும் பொழுது வயிறு வலி ஏற்படலாம்.