ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களுக்கும் ராசிகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளது.
அந்த வகையில் கிரகங்களில் ஏற்படும் சில பெயர்ச்சிகளால் ராசிகளுக்கு நல்ல பலன்கள் மற்றும் தீய விளைவுகள் ஏற்படுகின்றன.
கிரக பெயர்ச்சியில் சுக்கிரனுக்கு தனித்துவமான இடம் உண்டு. இதனால் இன்பம், மகிழ்ச்சி, செல்வச் செழிப்பு, பண வரவு, அழகு, அன்பு உள்ளிட்டவை கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
சுக்கிரன் சுமார் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். இன்னும் சில நாட்களில் கடக ராசிக்கு மாறப்போகிறார்.
இதனால் 12 ராசிகளில் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும்.
அப்படி வரத்தினால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. மேஷம் (Aries)
எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதியன்று சுக்கிரன் தனது ராசியிலிருந்து கடக ராசிக்கு மாறுகிறார். இதனால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். அவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கும்.
மாணவர்களாக இருந்தால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்பவர்களாக இருந்தால் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அத்துடன் பதவியுயர்வு கிடைக்கும். கஷ்டங்கள் முற்றுப்பெற்று ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும்.
2. கடகம் (Cancer)
கடக ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி ஏற்படுவதால் சமுதாயத்தில் இழந்த மரியாதையும் மதிப்பும் மீண்டும் கிடைக்கும். பணம் சம்பாரிக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் இந்த காலப்பகுதியில் முதலீடுகளை செய்யலாம்.
சிலருக்கு வீடுகளில் நீண்ட நாட்களாக பிரச்சினையாகவே இருக்கும். இந்த சுக்கிரன் பெயர்ச்சியடைந்து அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்று வைப்பார்.
3. துலாம் (Libra)
துலாம் ராசியில் பிறந்தவர்கள் சுக்கிர பெயர்ச்சியால் பெறும் லாபம் அடைவார்கள். இவர்களின் வேலைகளில் முன்னேற்றம் இருக்கும். இதனால் வருமானம், வேலைவாய்ப்பு, பதவியுயர்வு இப்படி பல நன்மைகள் கைக்கூடி வரும்.
திருமணம் நடக்காது என புலம்பிக் கொண்டிருப்பவர்கள் இந்த பெயர்ச்சி காலப்பகுதியில் முயற்சி செய்யலாம். ஏதாவது பணிகளை செய்ய முடிவு செய்து விட்டு நீண்ட நாட்களாக முடியாமல் தவிக்கிறீர்களா? சுக்கிரன் உங்களுக்கு உதவிச் செய்வார்.