பொதுவாக நமது சமூக அமைப்பை பொறுத்தவரையில், ஒரு குடும்பத்தில் தாய் தந்தைக்கு பின்னர் அதிக பொறுப்புகளை சுமப்பவர்கள் அந்த குடும்பத்தின் மூத்த பிள்ளைகள் தான்.இது இன்றுவரையில் ஒரு எழுதப்படாத விதியாகவே உள்ளது என்றால் மிகையாகாது.
அனைத்து மூத்த பிள்ளைகளுமே பொறுப்பு வாய்ந்தவர்களாக இருந்தாலும், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் குடும்பத்திற்கு இன்னொரு தந்தையாகவே கடமையாற்றும் அளவுக்கு பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படி குடுபத்தின் மொத்த சுமையையும் தங்கள் தோளில் சுமக்க தயாராக இருக்கும் மூத்த பிள்ளைகள் எந்த ராசியில் பிறந்த ஆண்களாக இருக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

அழகு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமாக அறியப்படும் சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி ஆண்கள் இயல்பாகவே உண்மைக்கும் நேர்மைக்கும் கடமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு இயல்பாகவே சிறந்த நிதி முகாமைத்துவ அறிவு காணப்படும். குடும்பத்தை பொறுப்பாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் இயற்கையிலேயே இருக்கும்.
தங்களின் அன்புக்கரியவர்களுக்காக எதையும் தியாகம் செய்யும் மனபாங்கு கொண்ட இவர்கள் தங்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் சரிவர நிறைவேற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்

அனைத்து கிரங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் தங்களை தலைமைத்துவ குணத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் குடும்பத்தை சரியாக வழிநடத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் தங்களின் பொருளாதார வளர்சியிலும் குறியாக இருப்பார்கள்.
இந்த ராசியில் பிறந்த மூத்த உடன்பிறப்புகள் எப்போதும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்பவர்களாகவும் கடமைகளை புறக்கணிக்காதவர்களாகவும் இருப்பார்கள். இந்த ராசி ஆண்களை மூத்த மகன்களாக பெற்ற குடும்பம் பெரும் தவம் செய்திலுக்கின்றது என்றே சொல்லலாம்.
துலாம்

துலாம் ராசியினரும் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால், குடும்ப உறவுகள் மீதும் தங்களின் அன்புக்குரியவர்கள் மீதும் அதீத அன்பும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் வார்த்தைகளைத் திறமையாக கையாளும் திறமை கொண்டவர்களாகவும் குடும்பத்தை இணக்கமான முறையில் வழிநடத்துவதில் கில்லாடிகளாகவும் இருப்பார்கள்.
அவர்கள் எளிமையாக உரையாடுபவர்கள், மேலும் கற்றுக்கொள்வதிலும் ஆராய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில் மூத்த மகனாக மாத்திரமன்றி இன்னொரு தந்தையாகவே பொறுப்புக்களை சுமக்கின்றார்கள்.
