பொதுவாகவே எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு முரட்டு பக்கம் இருப்பதை போல் ஒரு குழந்தை தனமான பக்கமும் இருக்கத்தான் செய்கின்றது.இதனை எல்லோரும் எல்லா மனிதர்களிடமும் வெளிப்படுத்துவது கிடையாது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் இவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் வயதானாலும் மனநிலையின் அடிப்படையில் எப்போதும் குழந்தை போல் நடந்துக்கொள்வார்கள்.இப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே நடிப்பு திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பெரியவர்கள் போல் பொறுப்பான வாழ்க்கை வாழ்வதற்கு பிடிப்பதில்லை. அதனால் தங்களுக்குள் இருக்கும் குழந்தை தனத்தை எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் இப்படி வாழும் போது தான் உண்மையில் மகிழ்சியாக இருப்பார்கள்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்களால் ரசிக்கப்பட வேண்டும் என்றும் நேசிக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இதனால் மனதுக்கு பிடித்தவர்களிடம் தங்களின் குழந்தை தனத்தை வெளிப்படுத்தும் இயல்பு இவர்களிடம் நிச்சயம் காணப்படும். இவர்கள் மிகவும் அன்பானவர்களாகவும் மற்றவர்களின் அன்புக்காக ஏங்குபவர்களாகவும் இருப்பார்கள்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக கற்பனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் வாழ்வில் பெரும்பாலான பகுதியை கற்பனை உலகிலேயே வாழ்ந்துவிடுகின்றார்கள்.இதனால் இவர்களுக்கு நிஜ வாழ்வில் இருக்கும் போராட்டங்கள் குறித்தும் வன்மம் தொடர்பிலும் அதிக தெளிவு இருப்பதில்லை. இவர்கள் மனம் உண்மையில் குழந்தை தனமானதாகவே இருக்கின்றது.