சில வீடுகளில் வெப்பம் தாங்க முடியாமல் ஏசியுடன் சேர்த்து சீலிங் ஃபேனையும் போட்டுக் கொள்வார்கள்.
ஆனால், ஏசி வேலை செய்யும்போது சீலிங் ஃபேனை பயன்படுத்தக்கூடாது என்று ஒரு சிலர் கூறுவார்கள்.
காரணம் ஏசி குளிர்காற்றை தரும். ஆனால், சீலிங் ஃபேன் அனல் காற்றைக் கொடுக்கும்.
ஆனால்,சீலிங் ஃபேனை ஏசியுடன் பயன்படுத்தும்போது அது அறையிலுள்ள காற்றை தள்ளுகிறது. இதனால் அந்த அறை குளிர்ச்சியாக இருக்கும்.
ஒரு ஃபேன் அறையிலுள்ள நான்கு மூலைகளிலும் குளிர்ந்த காற்றை பரப்புகிறது. இதனால் ஏசி அதிகமாக வேலை செய்ய வேண்டியதில்லை.
உண்மையில் கூறப்போனால், ஏசியோடு, ஃபேனையும் சேர்த்து பயன்படுத்தினால் மின்சாரத்தை சேமிக்கலாம். ஆனால் ஏசியில் 24 முதல் 26 வரையில் வெப்பநிலை அமைக்கப்பட வேண்டும்.
ஆனால், அறையிலுள்ள அனைத்து ஜன்னல்கள் மற்றும் கதவை மூடுவது சிறந்தது.
ஒரு நாளில் ஏசியை 6 மணித்தியாலங்கள் பயன்படுத்தினால் 12 யூனிட் அளவே செலவாகும் ஆனால், ஏசியுடன் சேர்த்து மின்விசிறியையும் பொருத்தினால், வெறும் 6 யூனிட் மட்டுமே செலவாகும்.
எனவே ஏசியுடன் சேர்த்து மின்விசிறியையும் பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.