பொதுவாகவே காலை நேரத்தில் அலுவலக வேலைக்கு செல்லும் கணவன், பாடசாலைக்கு செல்லும் குழந்தைகள் என வீடே போர்களமாகத்தான் இருக்கும்.
குறிப்பாக இவர்களுக்கு மத்தியில், மனைவியும் வேலைக்கு செல்பவராக இருந்தால் சொல்லவும் வேண்டுமா? இவ்வாறான நேரங்களில் காலை உணவு தயாரிப்பது மிகவும் சவாவான விடயம் தான்.

இதற்கு மத்தியிலும் குழந்தைகளுக்கும் தங்களுக்கும் ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த காலை உணவை வெறும் பத்து நிமிடத்தில் செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம் வெறும் 2 கப் ரவையை வைத்து சற்று வித்தியாசமான முறையில் ரவா புட்டு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- வறுத்த ரவை - 2 கப்
- கொதிக்க வைத்த பால் - ¾ கப்
- உப்பு - 1 தேக்கரண்டி
- துருவிய தேங்காய் - 1 கப்
- நெய் - 2 தேக்கரண்டி
- சர்க்கரை - 4 தேக்கரண்டி
தயாரிக்கும் முறை

- முதலில் ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையைச் சேர்த்து அதில், கொதித்து ஆறிய பாலை ஊற்றி, உப்பு சேர்த்து, ரவை ஈரப்பதமாகும் வகையில் லேசாக பிசரிவிட்டு, ரவை பாலை முழுமையாக உறிஞ்சும் வகையில் 5 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.
- அதனையடுத்து இந்த கலவையை ஒரு இட்லி தட்டு/ஸ்டீமர் தட்டிற்கு மாற்றி 5 நிமிடங்கள் வேகவைத்து ஒரு பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
- பின்னர் அதனுமடன் துருவிய தேங்காய், சர்க்கரை மற்றும் 1 தேக்கரண்டி நெய் சேர்த்த கலந்துவிட்டு பரிமாறினால் அட்டகாசமாக சுவையில் ரவா புட்டு தயார்.
