திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு தோட்டம் கருப்பராயன் கோவிலை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அந்த குழந்தைக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.
இதில் அந்த குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து குழந்தை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் மாநகராட்சி நிர்வாகம் தெற்கு தோட்டம் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.