இந்து மதத்தை பொருத்தவரையில் ஜோதிட சாஸ்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.ஜோதிட சாஸ்திரத்தில் பிரகாரம் வாரத்தில் 7 நாட்களும் கிரகங்களுடன் தொடர்புப்படுத்தப்படுகின்றது.
குறிப்பிட்ட கிரகத்திற்குரிய நாட்களில் அந்த கிரகத்துடன் தொடர்புடைய பொருட்களை வாங்குவது மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதேபோல, அந்த நாட்களில் சில பொருட்களை வாங்குவது துரதிஷ்டமாகவும் கருதப்படுகின்றது.
அந்த வகையில் எந்த தினங்களில் எந்த பொருட்களை வாங்குவது துரதிஷ்டத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
திங்கட்கிழமை: திங்கட்கிழமை சிவபெருமானின் விருப்பத்துக்குரிய நாளாக பார்க்கப்படுகின்றது. எனவே, இந்நாளில் தானியங்கள் வாங்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் வண்ணங்கள், தூரிகைகள், இசைக்கருவிகள் போன்ற கலை சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்குவது துரதிஷ்டத்தை ஏற்படுத்தும்.
நகல் புத்தகங்கள், விளையாட்டு தொடர்பான பொருட்கள், வாகனங்கள், மின்னணு சாதனங்கள் என்பவற்றை திங்கட்கிழமைகளில் வாங்கினால் சிவபெருமானின் கோபத்துக்கு ஆளாக வேண்டி ஏற்படும்.
செவ்வாய்க்கிழமை: செவ்வாய்க்கிழமையில் தவறியும் பால், மரம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பொருட்களையோ அல்லது உலோகங்கள் மற்றும் காலணிகளையோ வாங்குவது பெரும் துரதிஷ்டத்தை ஏற்படுத்தும்.
புதன்கிழமை:புதன்கிழமைகளில் ஒருபோதும் வீடு, பத்திரம், அரிசி, மருந்து, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை கொள்வனவு செய்யவே கூடாது. அது வாழ்வில் பல்வேறு பாதக தாக்கங்களை ஏற்படுத்தும்.
வியாழன்கிழமை:வியாழன் கிழமை குரு பகவானின் நாளாக பார்க்கப்படுகின்றது. குறித்த தினத்தில் கண்ணாடி பொருட்கள், பூஜை பொருட்கள், கூர்மையான பொருட்கள் போன்றவற்றை வாங்குவது வாழ்வில் பெரும் துரதிஷ்டத்தை கொடுக்கும்.
வெள்ளிக்கிழமை: வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு உகந்த நாளாக இருப்பதால் இந்த நாளில் மசாலா பொருட்களை வாங்குவதோ அல்லது அரைப்பதோ அசுபமாக பார்க்கப்படுகின்றது. அது மாத்திரமன்றி இந்நாளில் கத்தி, கத்திரிக்கோல் , இரும்பு சார்ந்த பொருட்களை தவறியும் வாங்க கூடாது.
சனிக்கிழமை: சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகின்றது. இந்த தினத்தில் உப்பு, அதிக இடையில் பொருட்கள், வீடு, இரும்பு சம்பந்தமான பொருட்கள் போன்றவற்றை வாங்குவது சனிபகவானை கோபப்படுத்தும். அது துரதிஷ்டத்தை கொடுக்கும்.
ஞாயிற்றுக்கிழமை: ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு விருப்பமான நாளாகும். எனவே இரும்பு மற்றும் இரும்பு சம்பந்தமான பொருட்களை வாங்குவது பெரும் துரதிஷ்டத்தை கொண்டுவரும் என்பது ஐதீகம்.