நாம் செய்யும் பாவ வினைகளுக்கு ஏற்ற வகையில் நமக்கு நன்மை தீமைகைளை தரக்கூடியவர் தான் கனி பகவான். இவா இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
சனி பகவான் இவர் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இதன் மூலம் எந்த ராசிக்கு நன்மை தக்கத்தை ஏற்படத்த போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
rனியின் பிடியால் உங்களுக்கு தொழிலில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சிறிய வேலைகளில் கூட பெரிய தடை ஏற்படக்கூடும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். கடின உழைப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும்.
வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். தொழிலில் கடுமையான போட்டி இருக்கும். அவ்வப்போது நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் உங்களுக்கு நவம்பர் மாதம் வரை பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கும்பம்
சனிப்பெயர்ச்சியின் காரணமாக நல்ல பலன்கள் கிடைப்பதற்கு தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடன் வேலை செய்பவர்களோடு கவனமாக இருக்க வேண்டும்.
உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொஞ்சம் கடினமான சூழலாக இது இப்போது இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் தேவையற்ற செலவுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நிதி நிலைமையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
இந்த கால கட்டத்தில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான தடைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
நவம்பர் மாதம் வரை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கடினமான இடத்திற்கு உங்களை பணியிட மாற்றம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உயர் அலுவலர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
சக ஊழியர்கள் உங்களுக்கு எதிரி போல் செயல்படுவார்கள். வேலை செய்யாவிட்டால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகள் அதிகரிக்கப்படும்.