வீட்டின் பூஜை அறையில் நாம் சில தவறுகளை செய்வதால் வீட்டில் வறுமை அதிகரிப்பதுடன், செல்வமும் தங்காமல் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இந்த பதிவில் பூஜை அறையில் செய்யக்கூடாத தவறை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. குறிப்பாக வீட்டின் பூஜை அறைக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
லீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதுடன், வீட்டில் நல்லது நடப்பதற்கும் தினமும் பூஜை செய்ய வேண்டும். அதே போன்று பூஜை அறையில் தேவையில்லாத சில பொருட்களை வைத்திருந்தால் எதிர்மறையான ஆற்றல் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பூஜை அறையின் அருகில் முன்னோர்களின் புகைப்படத்தை வைப்பது தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அசுபபலனை கொடுப்பதுடன், தெய்வங்களை அவமரியாதை செய்வதாகவும் பார்க்கப்படுகின்றது.
பழைய மத புத்தகங்களை பூஜை அறையில் வைப்பது எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.
வாடிய பூக்களை பூஜை அறையில் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். இதுவும் எதிர்மறை ஆற்றலை கொடுக்கும்.
பூஜை அறையில் பல சங்குகளை சிலர் வைத்திருப்பார்கள். வாஸ்து சாஸ்திரப்படி ஒன்றுக்கு மேற்பட்ட சங்குகள் இருந்தால் வாஸ்து தோஷம் ஏற்படும். மேலும் தெய்வங்களின் அருளை நேரடியாக பெற முடியாது. ஆதலால் ஒரு சங்கு மட்டும் வைத்திருப்பது நல்லது.
சனி பகவானின் சிலையை வீட்டு பூஜை அறையில் வைப்பதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
பூஜை அறையில் எந்த ஒரு உக்கிரமான அல்லது கோபமான தெய்வத்தின் புகைப்படத்தை வைக்கக்கூடாது.
சேதமடைந்த புகைப்படங்கள், சிலைகள் மற்றும் உருவங்களை பூஜை அறையிலிருந்து அகற்றிவிட வேண்டும். ஏனெனில் இவை எதிர்மறை ஆற்றலை கொடுக்கும்.
சிவலிங்கம் வைத்திருந்தால் உங்கள் கட்டை விரலை விட பெரிதான அளவில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பூஜை அறையை சுற்றி கனமான பொருட்களை வைக்கக்கூடாது.
எஞ்சியிருக்கும் பூஜை பொருட்களை அப்படியே அறையில் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஒழுங்காக அமைக்கப்பட்ட மற்றும் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை மட்டும் தான் பூஜை அறையில் வைக்க வேண்டும்.