பொதுவாக உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது சாதாரண விடயம் தான். ஆனால் சிலருக்கு அதிகமாக வியர்வை வெளியேறும்.

இன்னும் சொல்லப்போனால் குறிப்பாக அக்குள் பகுதியில் அதிகமாக வியர்வை வெளியேறுவதால் இது இலகுவில் உலர்வதில்லை. இந்த ஈரப்பதம் நீடிக்கும் போது பாக்டீரியா தொற்று அதிகமாகி துர்நாற்றம் வெளியேற ஆரம்பித்துவிடுகின்றது.

அதனால் நமது அன்றாட வேலைகளை கூட புத்துணர்வுடன் செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது. இது பொது இடத்தில் பழகும் போது, தர்ம சங்கடமான உணர்வை ஏற்படுத்துகின்றது.

அக்குள் துர்நாற்றத்தைப் போக்க பலர் வாசனை திரவியத்தை பயன்படுத்துகின்றனர். இது குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே தீர்வு கொடுக்கின்றது. மறுபடியும் வியர்வை துர்நாற்றம் வெளியேற ஆரம்பித்து விடுகிகின்றது. இந்த பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

அக்குள் வியர்வையால் அவதிப்படுறீங்களா? அப்போ இதுதான் நிரந்தர தீர்வு! | What Is The Best Treatment For Underarm Sweating

ஸ்வெட் பேடு (Sweat Pads)

அக்குள் பகுதியில் இருந்து வெளியேறும் வியர்யைால் ஏற்படும் துர்நாற்றத்துக்கு ஸ்வெட் பேடு சிறந்த தெரிவாக இருக்கும். வியர்வையை உறிஞ்சும் பட்டை எனப்படும் Sweat Pads நாள் முழுவதும் வியர்வை துர்நாற்றத்தில் இருந்து பாதுகாப்பு கொடுக்கின்றது. 

அக்குள் வியர்வையால் அவதிப்படுறீங்களா? அப்போ இதுதான் நிரந்தர தீர்வு! | What Is The Best Treatment For Underarm Sweating

வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும், ஜிம்மிற்கு செல்லும் போதும் வெளியூர் சென்றாலும், இதை மிகவும் எளிமையாக முறையில் பயன்படுத்த முடியும். 

இந்த ஸ்வெட் பேடுகளை  ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே பயன்படுத்த கூடியதாக இருக்கும். இது வியர்வையை திறம்பட உறிஞ்சி துர்நாற்றத்தை நடுநிலையாக்கி, நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வைத்திருக்க பெரிதும் துணைப்புரிகின்றது.

அக்குள் வியர்வையால் அவதிப்படுறீங்களா? அப்போ இதுதான் நிரந்தர தீர்வு! | What Is The Best Treatment For Underarm Sweating

அக்குள் பகுதி சருமத்தில் நேரடியாக ஒட்டிவைப்பது, அணியும் ஆடையின் உள்பகுதியில் ஒட்டிவைப்பது என ஸ்வெட் பேடுகள் இரண்டு விதங்களில் கிடைக்ககூடியதாக இருக்கின்றது.

சருமத்தில் நேரடியாக ஒட்டவைத்து பயன்படுத்தும் ஸ்வெட் பேடுகள். சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு சரும எரிச்சல் மற்றும் சிவத்தலை ஏற்படுத்தக்கூடும்.

இதன் மூலம் அக்குள் பகுதி சருமம் கருமையாக மாற நேரிடும். எனவே இவர்கள் ஆடையில் ஒட்டி பயன்படுத்தும் ஸ்வெட் பேடுகளை தேர்ந்தெடுக்கலாம்.

அக்குள் வியர்வையால் அவதிப்படுறீங்களா? அப்போ இதுதான் நிரந்தர தீர்வு! | What Is The Best Treatment For Underarm Sweating

சில ஸ்வெட் பேடுகளில் பயன்படுத்தப்படும் பசைகள், ஆடைகளில் நிரந்தரமாக ஒட்டிக்கொள்வதற்கு வாய்ப்புண்டு, இது உங்கள் ஆடையின் தன்மையை பொறுத்தோ அல்லது நீங்கள் தேர்வு செய்யும் ஸ்வெட் பேடுகளின் தரத்தை பொறுத்தோ மாற்றமடைகின்றது. 

சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு டிஸ்போசபிள் ஸ்வெட் பேடுகள் சிறந்த தேர்வாக இருக்கும். இவை காற்றோட்டத்தை அதிகரிப்பதோடு, பாக்டீரியாக்களின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்தும்.

அக்குள் வியர்வையால் அவதிப்படுறீங்களா? அப்போ இதுதான் நிரந்தர தீர்வு! | What Is The Best Treatment For Underarm Sweating

இந்த பேட் நன்றாக ஒட்டிக் கொள்வதால் கீழே விழாது. இது வியர்வையை நன்றாக உறிஞ்சி விடும். வியர்வையின் துர்நாற்றம் வெளியே வராது, வியர்த்த அடையாளமும் தெரியாது. இது மிகச்சிறந்த தீர்வாக அமைகின்றது.