திரையுலகில் கொடிக்கட்டி பறந்த நடிகை விமியின் இறுதிகாலம் பற்றி ஒரு உண்மைக்கதை வெளியாகியுள்ளது.

சினிமாவில் சீசன்களுக்கு அமைய சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலா வருவார்கள்.

திருமணத்திற்கு பின்னர் அல்லது ஏதாவது சர்ச்சையில் சிக்கி அவர்கள் இல்லாமல் போய் விடுவார்கள்.

அந்தவகையில் அப்படி கொடிக்கட்டி பறந்து விட்டு ஆள் அடையாளம் கூட தெரியாமல் போன நடிகை தான் விமி.

பாலிவுட்டில் சினிமாவில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் அதிகம் கவரப்பட்டார்.

திருமணத்திற்கு பின்னர் 2 குழந்தைகள் இருந்தனர், அவர்கள் பிறந்த பின்னர் தான் விமி திரையுலகிற்குள் வந்தார்.

இதன்படி, “ஆப்ரூ, ஹம்ராஸ், படாங்கா” ஆகிய படங்களில் சுனில் தத், சசி கபூர், ராஜ் குமார் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

60கள் காலப்பகுதியிலேயே இவருக்கு 3 இலட்சம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

கொடிக்கட்டி பறந்த நடிகை அனாதை பிணமாக சென்றது ஏன்? தகாத தொழிலில் தள்ளிய காதலன் | Cinema Bollywood Actresss Vimi Biography

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய கணவரை விட்டு பிரிந்த விமி, இன்னொரு நபருடன் தொடர்பில் இருந்தார். இவரால் கடைசியில் விமி தகாத தொழில் செய்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து சினிமா வாழ்க்கை சுமாராக 10 வருடங்களில் முடிவுக்கு வந்தது. இதனால் கடுமையாக மதுவிற்கு அடிமையாகி கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு கூட வழியில்லாமல் உயிரிழந்துள்ளார்.

பிரபல நடிகையாக இருந்த போது பல கார்களில் சென்ற விமி இறந்த பின்னர் ஒரு கைவண்டியில் எடுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.      

கொடிக்கட்டி பறந்த நடிகை அனாதை பிணமாக சென்றது ஏன்? தகாத தொழிலில் தள்ளிய காதலன் | Cinema Bollywood Actresss Vimi Biography