கணவன் - மனைவிக்கிடையிலோ அல்லது காதலன் - காதலிக்கு இடையிலோ சண்டைகள் ஏற்படுவது மிகவும் இயல்பானது.

அந்த வகையில் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் பேசினால் தீர்க்க முடியும். உறவுக்கிடையில் தகவல் தொடர்பாடல் அந்தளவுக்கு முக்கியமானது.

ஆனால், சில நேரங்களில் சண்டைகளின்போது ஆண்கள் விவாதிப்பதை நிறுத்திக்கொண்டு அமைதியாகிவிடுகிறார்கள்.

அதற்கு என்ன காரணம் என்று நிறைய பெண்கள் சிந்திக்கக்கூடும்.

இருவரும் வாதிடும்பொழுது பிரச்சினை பெரிதாக வளர்ந்துகொண்டே போகும் என்பதால் ஒரு சில ஆண்கள் அமைதியாக இருந்து விடுகிறார்கள்.

இன்னும் சில ஆண்கள் எதையும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். தங்கள் கருத்துக்களை உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொள்வார்கள் இதனாலும் விவாதத்தை தவிர்க்கலாம்.

இதற்கு ஈகோவும் முக்கிய காரணமாக இருக்கிறது. ஆண்களில் சிலர் அவர்களது சொந்த கருத்தை பின்பற்ற நினைப்பதால் மற்றவர்கள் பரிந்துரைகளை ஏற்க மறுக்கிறார்கள். இதனால் சண்டைகளின்போது அமைதியாக இருந்து விடுகிறார்கள்.

ஒரு விடயத்தை ஆழமாக பேசும்போது தமது பலவீனங்கள் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் அமைதியாக இருப்பார்கள்.

தனிபட்ட வாழ்க்கையையும் தொழிலையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத ஆண்கள் தங்களது மனநிலையை சரியாக வைத்துக்கொள்வதற்காக விவாதங்களை தவிர்க்கிறார்கள்.

இன்னும் சில ஆண்களுக்கு சண்டையிட்டு சலித்துப்போனாலும் விவாதங்களை தொடர விருப்பமிருக்காது.