காதல் உற்சாகமானது, மிகவும் இனிமையானது, மிகவும் கவர்ச்சியானதும் கூட.. இதில் உடல் மற்றும் மனதின் மொழியை வெளிப்படுத்தும் முறை மிக முக்கியமாக கருதப்பருகிறது.... கணவன் மனைவிக்கு இடையிலான காதல் மிகவும் முக்கியமானது. உறவை வலுப்படுத்துவதில் பாலியல் செயல்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நல்ல உறவில் பல காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இரு தம்பதிகளும் ஒருவருக்கொருவர் உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் விரும்ப வேண்டும்.
தம்பதிகளிடையே பாலுறவு ஆசையை அதிகரிக்கவும், உடலுறவை அதிகமாக அனுபவிக்கவும், பாலுறவில் முழு திருப்தி அடையவும் யோகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சில யோகாசனங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் பாலியல் ஆசையை அதிகரித்து படுக்கையில் தனது துணையை திருப்திபடுத்த வசதியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அது என்னென்ன யோகா? மற்றும் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்
யோகா செக்ஸ் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துகிறது: யோகா உங்கள் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் சமநிலையை அடைய உதவுகிறது. தம்பதிகள் ஜோடியாக யோகா செய்வது ஆன்மீக, உடல் மற்றும் பாலியல் தொடர்பை உருவாக்கும். ஜர்னல் ஆஃப் செக்சுவல் மெடிசினில் வெளியிடப்பட்ட 2009 ஆய்வின்படி, யோகா உற்சாகம், மற்றும் ஒட்டுமொத்த பாலியல் திருப்தியை அதிகரிக்கிறது. இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பிறப்புறுப்புகளில் இரத்த ஓட்டம் மேம்பட்டால், அது உடலுறவை அனுபவிக்க வைக்கும். யோகா உடலில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கிறது. வேலையில் கவனம் செலுத்துகிறது என்று நிருபிக்கப்பட்டுள்ளது.
1. வஜ்ராசனம்
இரண்டு கால்களின் பாத விரல்கள் ஒன்றன் மீது ஒன்று பதிந்துள்ள நிலையில் நேராக அமரவேண்டும். பாதங்களின் உட்பகுதியில் புட்டங்கள் தொட்டுக்கொண்ட நிலையில் அமரவேண்டும். இவ்விரண்டு நிலைகளிலும் சுவாசம் ஒன்றுபோல்தான் இருக்கும். இடுப்பிலிருந்து பாதம் வரை செல்லும் வஜ்ரநாடி அழுத்தப்படுவதால் இந்த ஆசனத்தை வஜ்ராசனம் என்று அழைக்கிறார்கள். தியானம் மற்றும் பிராணாயாமத்திற்கு இது ஒரு நல்ல தோரணையாகும். இதை சாப்பிட்ட உடனேயே 15 நிமிடங்கள் செய்வது, செரிமான அமைப்பை திறம்பட செயல்பட உதவுகிறது. வஜ்ராசனம் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, அடிவயிற்றை சுற்றியுள்ள கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.
2. பாசிமோட்டாசனம்:
கால்களை முன்னோக்கி நீட்டி உட்கார்ந்து முதுகுத்தண்டை வளைத்து செய்யும் ஒரு வகை சுவாச பயிற்சியாக இந்த ஆசனம் பார்க்கப்படுகிறது. இடுப்பு பகுதியில் காணப்படும் கூடுதல் கொழுப்பை கரைக்க இது உதவியாக இருக்கும். நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது, முதுகெலும்பு, தொடை எலும்புகள் மற்றும் தோள்களை நீட்டுகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் மனதை அமைதிப்படுத்துகிறது.
3. பதஹாசாசனம்
பாதம் என்றால் கால்கள், ஹஸ்தம் என்றால் கை என்று பொருள். இந்த ஆசனத்தில் கால்களையும், கைகளையும் ஒன்றாக இருக்கும் படி செய்வதால் இதற்கு பாதஹஸ்தாசனம் என்று அழைக்கப்படுகிறது. விரிப்பின் மீது கால்களை சேர்த்து வைக்கவும். மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்கிறது. தோரணையை மேம்படுத்துகிறது மற்றும் கால்கள் மற்றும் முக்கிய தசைகளை பலப்படுத்துகிறது. உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, செல்களுக்கு புதிய ஆக்ஸிஜனைக் கொண்டுவருகிறது.
4. தனுராசனம்
விரிப்பில் குப்புற படுத்து கைகளால் கால்களை இறுக பிடிக்கவும். சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் கைகளால் கால்களை இழுத்து தலையையும் கழுத்தையும் மேலே தூக்கி வளைத்து கால்களையும் மேல் நோக்கி இழுத்து உடலை கொண்டுவரவும். ஒரு முறைக்கு ஐந்து முதல் பதினைந்து வினாடியாக மூன்று முதல் ஐந்து முறை செய்யலாம். இந்த ஆசனம் முதுகு, தோள்பட்டை மற்றும் கழுத்து தசைகளை பலப்படுத்துகிறது. இது முதுகுத்தண்டை நெகிழ வைக்க உதவுகிறது. தனுராசனம் வயிற்று உறுப்புகளைத் தூண்டி செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த யோகா கைகள் மற்றும் தொடைகளின் தசைகளையும் பலப்படுத்துகிறது.
5. சக்ராசனம்
சக்கராசனம் என்பது உடலை சக்கரம் போல் வளைத்துக் காட்டும் ஒரு ஆசனப்பயிற்சி நிலையாகும். இச்சொல்லின் பொருள் சமசுகிருத மொழியில் இருந்து வந்ததாகும். "சக்ரா" என்றால் சக்கரம் எனவும் ஆசனம் என்றால் நிலை என்றும் பொருளாகும். பார்ப்பதற்கு மேற்புறமாக நோக்கி அமைந்துள்ள வில்லை போன்று இந்நிலை தோன்றும். சக்ராசனம் அல்லது வீல் போஸ் கால்கள் மற்றும் கைகளை பலப்படுத்துகிறது. தோள்பட்டை மற்றும் ஒட்டுமொத்த முதுகெலும்பு இயக்கத்தை மேம்படுத்துகிறது. இது மார்பைத் திறந்து ஆழமான சுவாசத்தை எளிதாக்குகிறது. இது இனப்பெருக்க மற்றும் வெளியேற்ற அமைப்புகளுக்கு ஒரு சிறந்த ஆசனமாக செயல்படுகிறது.