மின் மற்றும் நீர் கட்டணம் தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லையென அரசாங்கம் பொதுமக்களை கோரியுள்ளது.

நீர் மற்றும் மின் கட்டணம் என்பவற்றுக்கென தேவையான நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மின்சார சபையின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கென வெவ்வெறு மின் கட்டணங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பெப்ரவரி மாத மின்கட்டணத்தை ஒப்பிடும் வகையில் மார்ச் மாதத்திற்கான மின்கட்டணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

எனினும் மார்ச் மாதத்திற்கான பட்டியல் அதிக கட்டணத்தை கொண்டதாக இருக்குமாயின் அது குறித்து 1987 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்கமுடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின் கட்டணங்களை செலுத்துவதற்கு அதிகபடியான நிவாரண காலத்தை வழங்குவது குறித்து அரசாங்கமே இறுதி தீர்மானம் எடுக்குமென மின்சார சபையின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்