பொதுவாக நம்மிள் சிலர் பாலில் அதிகமான ஊட்டசத்துக்கள் இருக்கின்றது என நினைத்து கொண்டு தினமும் படுக்கைக்கு செல்லும் முன்னர் குடிப்பார்கள்.
மாறாக இவ்வாறு அதிகமான பால் குடித்தால் எலும்புகள் உடையக்கூடியதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
மேலும் பாலில் அதிகமான ஆரோக்கியம் நிறைந்த சத்துக்கள் இருக்கலாம். ஆனால் இதனை அளவிற்கு அதிகமாக எடுத்து கொண்டால் அதே ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
ஸ்வீடிஷ் ஆய்வின்படி, ஒரு நாளில் அதிக பால் குடிப்பது இறப்பு மற்றும் எலும்பு முறிவு அபாயத்துடன் தொடர்புடையது என கண்டுபிடித்துள்ளார்கள்.
ஆராய்ச்சியாளர்களின் பொருத்தவரையில் ஒரு நாளை மூன்று அல்லது அதற்கு மேல் அருந்தினால் இவ்வாறான ஆபத்துக்கள் ஏற்படலாம்.
இது போல் பால் குடிப்பதால் வேறு என்ன பிரச்சினைகள் வரும் என தொடர்ந்து நாம் பார்க்கலாம்.
பால் குடிப்பதால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் ஒரு நாளைக்கு மூன்று கிளாஸ் பாலிற்கு மேல் எடுத்து கொள்ளக் கூடாது.
இவ்வாறு அவர்கள் செய்வது அவர்களின் மரணத்திற்கு அவர்களே வழிவகுப்பதற்கு ஒத்ததாகும். இதனால் இறப்பு வீதம் நாளுக்கு நாள் அதிகரிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
பொதுவாக நாம் அருந்தும் பாலில் கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் பி 12 மற்றும் புரதம் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. இதனால் நீங்கள் தயக்கமின்றி இதனை எடுத்து கொள்ளலாம்.
இவ்வாறான ஆபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் பால் குடித்தால் போதுமானதாக இருக்கும்.
அதிகமாக பால் குடிப்பதால் பால்கசிவு ஏற்பட்டு குடல் புறணி மீது அழற்சி விளைவுகளை ஏற்படுத்துகிறது. அத்துடன் ஏ 1 கேசீன் அது குடல் புறணியின் ஊடுருவலை அதிகரிக்கும். இதனால் அதிகமான சோர்வு ஏற்படும்.பாலில் இருக்கும் கொழுப்புக்கள் உங்களின் முகங்களில் பருக்களாக தோன்றி அழகில் மாற்றத்தை ஏற்படுத்தும்.செரிமான பிரச்சினைகளுக்கு பால் முக்கிய பங்களிப்பு கொடுக்கும். ஆனால் அதிகப்படியான பால் வீக்கம், பிடிப்புகள் அல்லது வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும்.