நம்மில் பெரும்பாலான நபர்கள் மொபைல் போனை பேசுவதற்கு, தகவல் அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையில், இன்னும் பல விஷயங்களை இதன் மூலம் செயல்படுத்தலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்போம்.
இன்று ஸ்மார்ட் போன் என்பது மனிதர்களின் ஒரு அங்கமாகவே மாறிவிடுகின்றது. எதை வெளியே எடுத்துச் செல்லாவிட்டாலும் மொபைல் போனை மட்டும் மறக்காமல் எடுத்துச் சென்று விடுகின்றோம்.
நாளுக்கு நாள் வரும் புதிய அப்டேட்கள், மொழி பெயர்ப்பு, இசை என பல வழிகளில் இதனை பயன்படுத்துவது மட்டுமின்றி லட்சக்கணக்கில் சம்பாதிக்கவும் செய்யலாம்.
- ஸ்மார்ட் போன் மூலமாக கூகுள் லென்ஸ் வசதியை பயன்படுத்தி மொழிபெயர்ப்பு செய்யலாம். அதாவது கூகுள் லென்ஸ்ஸை உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து எந்தவொரு உரையையும் நேரடியாக மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம்.
- அருகில் ஒலிக்கும் பாடலை அடையாளம் காண, “ஹலோ கூகுள், என்ன பாடல் ஒலிக்கிறது?” என்று குரல் உதவியாளர் கட்டளையை வழங்கினால், நீங்கள் கூகுளை கேட்கும் பாடலை என்ன என்பதை தெரியப்படுத்தும்.
- இன்று பல ஆண்ட்ராய்டு போன்களில் ஐஆர் பிளாஸ்டர் உள்ளதால், இதனை பயன்படுத்தி டிவி, ஏசி இவற்றினை இத்துடன் இணையத்து ரிமோட் கண்ட்ரோலாக வைத்துக்கொள்ளலாம்.
- மெட்டல் டிடெக்டர் செயலினை பதிவிறக்கம் செய்து மெட்டல் டிடெக்டராகவும் பயன்படுத்தலாம்.
- உங்களது கம்யூட்டருக்கு வயர்லெஸ் மவுஸைப் பயன்படுத்தினால், புளுடூத் உதவியுடன் அதனை மொபைல் செட்டிங் சென்று இணைத்தால் மவுஸாகவும் பயன்படுத்தலாம். அதாவது உங்கள் கம்யூட்டரில் மவுஸ் சரியாக வேலை செய்யவில்லயெனில் போனையே மவுஸாக பயன்படுத்தலாம்.
- ஸ்மார்ட் போன் ஸ்மார்ட் ஆசிரியர் என்று கூறப்படுகின்றது. நமது போனில் இண்டர்நெட் மட்டும் இருந்துவிட்டால், யூடியூப் வழியாக எந்தவொரு விடயத்தையும் எளிதில் கற்றுக்கொள்ளலாம்.