பொதுவாக வீடுகளில் வலம்புரிச் சங்கை வைத்து வழிபாடுகள் செய்வார்கள்.
இப்படி செய்வதால் வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் நீங்கி அதிஷ்டம் மற்றும் ஐஸ்வர்ய கடாட்சம் கிடைக்கும் என சாஸ்திரம் கூறுகின்றன.
இவ்வளவு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் வலம்புரி சங்கினை வீட்டில் வைக்க வேண்டும் என்றால் அதை பராமரிக்க சில நடைமுறைகள் உள்ளன.
அது படி, வலம்புரிச் சங்கை வைத்திருந்தால் மட்டுமே அதிர்ஷ்டத்தை நிலைக்க வைக்க முடியும்.
அந்த வகையில், வலம்புரி சங்கினை எப்படி பராமரிக்க வேண்டும்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வாய் பகுதி முதல் சுழி வரை வலது புறமாக சுழன்று இருக்கும் சங்கை வலம்புரி சங்கு என்பார்கள்.
இப்படி இருக்கும் சங்குகள் (Dakshinavarti Shankh) அரிய வகையாகும்.
இந்து நம்பிக்கையின்படி, வலம்புரி சங்கு புனிதமாகவும், வளத்தை அள்ளிக் கொடுக்குட் லட்சுமியாக பார்க்கப்படுகின்றது.
வழிபடும் முறைகள்
- வலம்புரிச் சங்கை வைப்பதற்கு ஒரு வெள்ளித்தட்டை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அதில் பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள்.
- சங்கை வைப்பதற்கு வெள்ளித் தட்டு வாங்க வசதியில்லாதவர்கள் பித்தளை தட்டினை உபயோகிக்கலாம்.
- பின்னர் அதன் மேல் வெண் பட்டு விரித்துக் கொள்ளவும். அந்த தட்டினை மகாலட்சுமி படத்தின் முன்னாள் வைக்கவும்.
- பின் தட்டின் மீது வலம்புரிச் சங்கினை வாய் பிளந்த பக்கம் மேற்புறமாக இருக்குமாறு வைக்கவும்.
- சங்கிற்கு முன் பகுதியில் நடுவில் வட்டமாக ஒரு பொட்டு வைக்கவும்.
- சங்கை சுற்றி 7 பொட்டுக்கள் வைக்கலாம். பின்பு பிளந்த பக்கத்தின் ஓரமாக அதே போல் 7 பொட்டுகள் வைக்கவும்.
- சங்கினுள் சிறிது மஞ்சள் கலந்த நீர் விட்டு நிரப்பவும்.
- சங்கை கிழக்கு பக்கமாக வைத்து இரண்டு கிராம்பு சங்கினுள் போடவும்.
- கடைசியாக நெய் தீபம் ஏற்றி தட்டினைச் சுற்றி பூக்களைத் தூவி அலங்கரிக்கவும்.
ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தன்னோ சங்கஹ் ப்ரசோதயாத்'
என்று சங்கு காயத்ரி மந்திரத்தை 18 முறை சொல்லி தூப, தீபம் ஆராதனை செய்து சங்கினை வழிபட வேண்டும்.
பின்னர் மகாலட்சுமி தாயாரை நினைத்து,
'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை
ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை
சர்வ தாரித்ரிய நிவாரணாயை
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா:'