பரங்கிக்காய் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ள நிலையில், வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டுள்ளது.
பரங்கிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் டி, ஃபோலேட், நியாசின், பான்டோதெனிக் அமிலம், தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.
பரங்கிக்காயை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்து ஒரு டம்ளரில் ஊற்றிக் கொள்ளவும். இதில் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு, உப்பு இவற்றினை சேர்த்து இரவில் குடித்து வந்தால் வயிற்றில் கொழுப்பு கரையும்.
பரங்கிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி அதனை குக்கரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு இறக்கவும். இறக்கிய பின்பு காயை நன்கு மசித்து, பின்பு ஒரு கடாயில் சிறிது நெய் சேர்த்து, கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து மசித்த காயையும் போட்டு சிறிது உப்பு போட்டு சாப்பிடவும்.
இதில் இருக்கும் வைட்டமின் ஏ சத்துக்கள் கண்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதுடன், மாரடைப்பையும் தடுக்கின்றது.
பரங்கிக் காயின் சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகும், இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கி ரத்த சோகையையும் குணப்படுத்துகின்றது.
காலை மற்றும் மாலையில் 30 மில்லி சாறுடன் நாட்டுச்சக்கரை சேர்த்து சாப்பிட்டால் வலிப்பு நோய் குறையும். பல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்.
மூலநோய், வயிற்று பிரச்சினை இவற்றினை நீக்கும் தன்மை பரங்கிக்காய்க்கு உள்ளது.