நேற்றைய தினம் (10) கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான கொவிட் 19 தொற்றாளர்கள் பதிவாகி உள்ளனர்.
அதன்படி, 551 பேர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த மாவட்டத்தின் திவுலப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மாத்திரம் 120 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக அந்த நிலையம் தெரிவித்தது.
சீதுவை, கட்டான மற்றும் மினுவங்கொடை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 172 புதிய கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் நேற்று (10) 321 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அந்த மாவட்டத்தின் பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மாத்திரம் 50 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும், கொழும்பு நகர எல்லையில் 32 தொற்றாளர்களும், அவிசாவளையில் 18 தொற்றாளர்களும், ஹோமாகமவில் 18 தொற்றாளர்களும், கொட்டாவையில் 27 தொற்றாளர்களும், மொரடுவையில் 30 தொற்றாளர்களும், பிலியந்தலையில் 50 தொற்றாளர்களும் மற்றும் தலங்கமவில் 35 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளதாக கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்தது.
களுத்துறை மாவட்டத்தின் மீகஹதென்ன மற்றும் பாணந்துறை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 129 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்றைய தினத்தில் குறித்த மாவட்டத்தில் 362 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மாத்திரம் நேற்றைய தினம் 102 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 184 புதிய கொவிட் தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்தது.
குருணாகலை மாவட்டத்தில் 177 பேரும், காலி மாவட்டத்தில் 170 பேரும், இரத்தினபுரியில் 128 பேரும், யாழ்ப்பாணத்தில் 109 பேருமாக நேற்றைய தினத்தில் நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் நாட்டின் 8 மாவட்டங்களில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 மாவட்டங்களில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் பதிவு!
