ஹட்டன் - வெலிஓயா மேற்பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் 10 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

தோட்டத் தொழில் சங்கங்களுக்கு சந்தா பணம் அறவிடப்படாமை, கைக்காசு வேலை செய்கிறவர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படாமை, மேலதிக கொழுந்து பறித்தலுக்கு உரிய கொடுப்பனவு வழங்கப்படாமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே வெலிஓயா மேற்பிரிவு தோட்டத்தில் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

தமது போராட்டம் தொடர்பாக தோட்டத் தொழிலாளர்கள் தாம் அங்கத்துவம் வகிக்கும் தொழில் சங்கங்களுக்கு அறிவித்துள்ளனர்.

இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பில் தோட்ட நிர்வாகம் கலந்து ஆலோசிப்பதாக தோட்ட நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.