சருமத்திற்கு எவ்வளவு அழகு சேர்க்கும் பொருட்களை எடுத்து கொண்டாலும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை உபயோகிப்பதை போல வருவதில்லை.

தற்போதைய பெண்கள் சரும அழகிற்கு நவீன ரசாயன பொருட்களை பயன்படுத்தினாலும் அது ஆரோக்கியத்தை தருவதில்லை. இதனால் முகம் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே அழகாக இருக்கும்.

அந்த வகையில் நம்முடைய முன்னொர் பயன்படுத்திய அழகுக்குறிப்புகளை இங்கு பயன்படுத்தினால் சருமத்திற்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

முன்னோர்கள் பயன்படுத்திய அழகுக்குறிப்புகள் என்னனு தெரியுமா? | Beauty Tips Used By Ancestors

பொதுவாக பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது இந்த முகப்பரு பிரச்சனையாகும். ஒரு கொஞ்சமாக வேப்பிலையை எடுத்து அதை தண்ணீரில் பொட்டு கொஞ்ச நேரம் கொதிக்க விட வேண்டும்.

பின்னர் இதை ஆற விட்டு முகத்தில் அழுத்தி தேய்த்து வந்தால் முகப்ரு கிட்ட கூட நெருங்காது.வேப்பிலை பொடியுடன் திராட்சை விதை எண்ணெய் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் வைத்து விட்டு கழுவினால் சருமத்தில் ஈரப்பதன் சரியாக பேணப்படும்.

முன்னோர்கள் பயன்படுத்திய அழகுக்குறிப்புகள் என்னனு தெரியுமா? | Beauty Tips Used By Ancestors

சருமத்தில் ஏதாவது ஒரு காயம் எற்பட்டடு அதனால் இருக்கும் வடுவை நீக்க தினமும் தேனை வடு இருக்கும் இடத்தில் பூசி வந்தால் வடு இல்லாமல் போய் விடும். முடி உதிர்வு பிரச்சனையால் சிரமப்படுபவர்கள் நெல்லிக்காயாயை எடத்து கொள்ளலாம்.

நெல்லிக்காயை 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் சாறுடன், சமஅளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

முன்னோர்கள் பயன்படுத்திய அழகுக்குறிப்புகள் என்னனு தெரியுமா? | Beauty Tips Used By Ancestorsஇதை தலையில் பூசி சிறிதுநேரம் வைத்ததின் பின் குளிக்க வேண்டும். இப்படி செய்தால் தலைமுடி சிறப்பாக வளர்வதுடன் பொடுகுத் தொல்லை நீங்கி சுத்தமாக இருக்கும்.