மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர் இன்று சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
மாஸ்டர் Thalapathy New Look Poster : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்தப்படத்தை மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அவருடன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளார் மேயாதமான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார்.
மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜயின் உறவினரான பிரிட்டோ மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, மகேந்திரன், சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம், சாத்தன், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, வர்ஷா பொல்லம்மா மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.
மேலும் இப்படத்தில் இருந்து சில போஸ்டர்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருந்தன. அவைகளைத் தொடர்ந்து தற்போது ஃபேன் மேடு போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் படித்துக் கொண்டிருக்கும் நியூஸ் பேப்பர் பற்றி எரிய தளபதி ஸ்டைலாக அமர்ந்திருப்பது போல அந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த போஸ்டர்
#Master Poster Work 🔥@MasterTeamOffi pic.twitter.com/nu50uurZTm
— Master Team (@MasterTeamOffi) June 24, 2020