ஜோதிடத்தின் படி வெள்ளிகிழமையில் பிறந்தவர்களின் ஆளுமை, மற்றும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக ஜோதிடத்தின் படி நாம் பிறந்த கிழமைகளை வைத்துக் கூட நமது ஆளுமை, மற்றும் வாழ்க்கையின் அடுத்த கட்டம் இவற்றினை நிச்சயமாக எடுத்துக் கூற முடியும்.
அந்த வகையில் வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் லட்சுமி கடாட்சம் அதிகம் கொண்டவராக இருப்பார்கள். அதாவது எந்த மாதத்தில் வெள்ளிக்கிழமையில் பிறந்தாலும், அன்பு மற்றும் அழகு, நல்லிணக்கம் இவற்றில் தொடர்புடைய வீனஸ் கிரகத்தில் ஆளப்படுவதாக கூறப்படுகின்றது.

கனிவானவர்களாகவும், கவர்ச்சிகரமான ஆளுமையைக் கொண்டவராகவும், நல்லிணக்கத்தை உருவாக்கி அதில் மகிழ்ச்சியடையும் இவர்கள், அமைதியும், படைப்பாற்றல் கொண்டவராக இருப்பார்கள்.
சமூகத்தில் அக்கறை கொண்டதுடன், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிகமான நேரத்தை செலவிடுவார்கள். நகைச்சுவை உணர்வு கொண்டதுடன், அருகில் இருப்பவரை எப்பொழுதும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள்.

மேலும் மற்றவர்களின் பார்வைகளை புரிந்து கொள்ளும் திறனை கொண்டிருப்பதுடன், கடின உழைப்பாளியாகவும், லட்சியவாதியாகவும் இருப்பார்கள்.
இவர்களின் எதிர்மறையான பண்புகள் என்னவெனில், முடிவெடுக்க சில நேரத்தில் தயங்குவதுடன், அதிக உணர்திறன் கொண்டவராகவும், சோம்பேறியாக வேலையை தள்ளிப்போடும் பழக்கத்தை கொண்டவராகவும் இருப்பார்கள்.

