பொதுவாக ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி தங்களின் தலை முடியை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள் வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே முடி வறண்டு காணப்படுவதுடன் அதிகமாக உதிரவும் ஆரம்பித்துவிடும். அதே நேரத்தில் கூந்தலில் அதிகப்படியான பாதிப்பு அடைகிறது.

குளிர்காலத்தில் கூந்தலை பராமரிக்க சில எளிய வழிகள்! எதையெல்லாம் செய்யவே கூடாது? | How To Protect Your Hair During Winters

குளிர்காலத்தில் கூந்தல் பராமரிப்பு என்று வரும் போது சிலவற்றை நாம் பின்பற்ற வேண்டும் சிலவற்றை நாம் பின்பற்றக் கூடாது. தவறான பராமரிப்பு கூந்தலுக்கு அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

குளிர்காலத்திலும் உங்கள் கூந்தலை வலுவாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும் பாதுகாக்க எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

குளிர்காலத்தில் கூந்தலை பராமரிக்க சில எளிய வழிகள்! எதையெல்லாம் செய்யவே கூடாது? | How To Protect Your Hair During Winters

குளிர்காலத்தில் உங்கள் தலைமுடி அதிகமாக  வரண்டு போகாமலும் இருக்க , கூந்தலுக்கு எண்ணெய் தடவுவது மிகவும் முக்கியம். இது தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளித்து ஆரோக்கியமாக வைத்திருக்கவும் துணைப்புரிவதுமன் கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வனிக்கின்றது. 

குளிர்காலத்தில் கூந்தலை பராமரிக்க சில எளிய வழிகள்! எதையெல்லாம் செய்யவே கூடாது? | How To Protect Your Hair During Winters

கூந்தலை வலுவாகப் பராமரிக்க, வாரத்திற்கு 2 முதல் 3 முறை மறக்காமல் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் கொண்டு உங்கள் தலைமுடியை மசாஜ் செய்வது கூந்தல் வறட்சியில் இருந்து பாதுகாப்பதுடன் கூந்தலின் இயற்கை பொலிவையும் மினு மினுப்பையும் மீட்டுக்கொடுக்கின்றது. 

குளிர்காலத்தில் கூந்தலை பராமரிக்க சில எளிய வழிகள்! எதையெல்லாம் செய்யவே கூடாது? | How To Protect Your Hair During Winters

உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி உதிர்தலை கட்டுப்டுத்துவதுடன் புதிய முடிகள் வளர்ச்சியையும் தூண்டும். 

குளிர்காலத்தில் தலைக்கு குளிக்கும் போது, குளிர்ந்ந நீரை பயன்படுத்துவதைவிடுத்து வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்துவது கூந்தல் வறண்டு போவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

குளிர்காலத்தில் கூந்தலை பராமரிக்க சில எளிய வழிகள்! எதையெல்லாம் செய்யவே கூடாது? | How To Protect Your Hair During Winters

குளிர்காலத்தில் தலையின் சருமம் நீரேற்றம் இல்லாமல் இருக்கும் போது பொடுகுத் தொல்லை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். எனவே குளிர்காலத்தில்  வாரம் ஒருமுறை எலுமிச்சை சாறு அல்லது வேப்பிலை கலந்த நீரைக் கொண்டு கூந்தலைப் பராமரிப்பது பொடுகை கட்டுப்படுத்தி நேர்த்தியான அழகிய கூந்தலை பராமரிக்க துணைப்புரியும். 

குளிர்காலத்தில் கூந்தலை பராமரிக்க சில எளிய வழிகள்! எதையெல்லாம் செய்யவே கூடாது? | How To Protect Your Hair During Winters

குளிர்காலத்தில் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், சத்தான உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள் முடி உதிர்வைத் தடுக்க வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகள் அவசியம். குறிப்பாக முட்டை, நட்ஸ் (Nuts), மற்றும் கீரை வகைகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

குளிர்காலத்தில் கூந்தலை பராமரிக்க சில எளிய வழிகள்! எதையெல்லாம் செய்யவே கூடாது? | How To Protect Your Hair During Winters

தலையில் ஈரப்பதம் இருக்கும் போது முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது. குளிர்காலத்தில் குளித்தவுடன் தலையை நன்றாக துவட்ட வேண்டும். கூந்தலை உலர வைக்க டிரையர் போன்றவற்றை பயன்படுத்த கூடாது. இதுவும் கூந்தல் ஊதிர்வை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.