நம்மில் பலருக்கு ராசிக்கல் அணிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நமது ராசிக்கு ஏற்ற கல் எது என தெரியாமல் சிறிது குழம்பமடைவதும் வழக்கம். 

இந்த பதிவில் உங்கள் ராசிக்கான சரியாக ராசிக்கல் எது என்பது குறித்து பார்கலம். ஆனால் ராசிக்கல்லை அணிவதற்கு முன் ஜோதிடரை அணுகுவது மிகவும் சிறந்தது.

ராசிக் கற்கள் தரும் அதிர்ஷ்டம்; உங்கள் ராசிக்கு எந்த கல் அணியணும்னு தெரியுமா? | Which Is Lucky Stone For Your Zodiac Sign

கிரக நிலைகளில் சாதக மாற்றம் இருக்கும் பட்சத்தில் ராசிக்கு ஏற்ற கல்லை அணிவதால் நன்மைகள் இரட்டிப்பாகும். 

 

ராசிக் கற்கள் தரும் அதிர்ஷ்டம்; உங்கள் ராசிக்கு எந்த கல் அணியணும்னு தெரியுமா? | Which Is Lucky Stone For Your Zodiac Sign

மேஷம்

மேஷ ராசியினர் செவ்வாயால் ஆளப்படுகின்றனர். இந்த கிரகத்தின் நிறம் சிவப்பு என்பதால் இயல்பாகவே இந்த ராசியினருக்கு சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். எனவே இந்த ராசியினர் சிவப்பு பவளம் அணிவதால் சிறந்த பலனை பெறலாம். 

ரிஷபம்

சுக்கிரனால் ஆளப்படும் ராசியினரான இவர்கள் மரகதம் அல்லது வைரம் அணிந்தால் காதல்  வாழ்க்கை அமோகமாக இருக்கும் மேலும் நிதி பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

மிதுனம்

புதனின் ஆதிக்கத்தில் பிறந்த மிதுன ராசியினர்  மரகதம் அல்லது அகாட் அணிவதால் இவர்களின் சிந்தனை தெளிவடையும்.

கடகம்

சந்திரன் ஆட்சி செய்யும் கடக ராசியினர்  சந்திர கல் அல்லது முத்து அணிவதால் அதிர்ஷ்டம் தேடி வரும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். 

 

ராசிக் கற்கள் தரும் அதிர்ஷ்டம்; உங்கள் ராசிக்கு எந்த கல் அணியணும்னு தெரியுமா? | Which Is Lucky Stone For Your Zodiac Sign

சிம்மம்

சிம்ம ராசியினர் மாணிக்கங்கள் அல்லது மாதுளைகளை அணிவதால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். 

கன்னி

கன்னி ராசியினரின் அதிபதியாக சபையர் அல்லது பெரிடோட் அணிவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

துலாம்

துலா ராசியினரும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இந்த ராசிக்காரர்கள் வைர நகைகளை அணியவதால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். 

விருச்சிகம்

செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த விருச்சிக ராசியினர் கார்னெட் அல்லது நீலமணியை அணிவது நன்மை பயக்கும். 

 

ராசிக் கற்கள் தரும் அதிர்ஷ்டம்; உங்கள் ராசிக்கு எந்த கல் அணியணும்னு தெரியுமா? | Which Is Lucky Stone For Your Zodiac Sign

தனுசு

தனுசு ராசியை வியாழ பகவான் ஆள்வதால் இந்த ராசியினர் ரத்தினங்களை அணிய வேண்டும். இந்த ராசிக்கு டர்க்கைஸ் அல்லது மஞ்சள் நீலக்கல் அணிவது நன்மை பயக்கும். அதனால் அதிர்ஷ்டம் கொடுக்கும். 

மகரம்

சனிபகவான் ஆச்சியில் பிறந்த மகர ராசியினர்  மோசமான விளைவுகளை குறைக்க  செவ்வந்தி அல்லது நீல சபையர் அணிவது நன்மை பயக்கும். அதனால் நிதி நிலைமையும் மேம்படும். 

கும்பம்

சனியின் ஆதிக்கத்தில் பிறந்த கும்ப ராசியினர் கார்னெட் அணிவது சாதகமான பலன்களை கொடுக்கும்.

மீனம்

வியாழன் ஆட்சியில் பிறந்த மீன ராசியினர் அக்குவாமரைன் அல்லது சந்திர கல் அணிவதால் நன்மைகள் கிடைக்கும்.  இது ஆன்மிகம், படைப்பாற்றல் மற்றும் உள்ளுணர்வை மேம்படுத்துவதில் பெரிதும் துணைப்புரியும்.