சிலருக்கு சிறு காயத்தால் வரும் ரத்தத்தை பார்த்தால் தலை சுற்றி அவர்கள் நிலையே மாறி காணப்படும்.
சிலர் ஒரு சிறிய காயத்தை பார்த்தால் அதுவும் அதில் ரத்தம் வடிவதை பார்த்தால் மயக்கம் போடுவார்கள் இல்லை என்றால் சாதாரணமாக இல்லாமல் மயக்கம் போட்டு விழவும் செய்வார்கள்.
ஆனால் இதை பார்க்கும் சிலர் இது என்ன கொஞ்சம் ரத்தம் தானே அதற்கு ஏன் இப்படி செய்கின்றனர் என யோசிக்க தோன்றும். ஆனால் இது உண்மையில் ஒரு பிரசசனை.
அதாவது 'வேசோவாகல் சின்கோப்' காரணமாகவே அவர்களுக்கு இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறதாம். .தை விரிவாக பார்க்கலாம்.

'வேசோவாகல் சின்கோப்'
நம்மை சுற்றி நமது நண்பர்களிலேயே சிலருக்கு அடிக்கடி மயக்கம் வரும். அதிலும் குறிப்பாக ஒரு சொட்டு ரத்தத்தைப் பார்த்தாலே மயங்கி விழுந்துவிடுவார்கள்.
அவர்களுக்கு நமக்கு தெரிந்து வேறு எந்த பிரச்சனையும் உடலில் இருக்காது ஆனால் அடிக்கடி மயக்கம் மட்டும் போடுவார்கள். இதற்கான காரணம் யாருக்காவது தெரியுமா? அது உண்மையில் உடலில் இருக்கும் ஒரு பிரச்சனை.
"மூளைக்கு ரத்த ஓட்டம் தற்காலிகமாகக் குறையும்போது, மயக்கம் ஏற்படுகிறது. இது திடீரென இதயத் துடிப்பு அதிகரிப்பது அல்லது ரத்த அழுத்தம் குறைவதால் நிகழலாம். இதனால் ஒரு குறுகிய நேரத்திற்குச் சுயநினைவு இல்லாமல் போகும்.
இதுபோன்ற சூழல்களில் ஏற்படும் மயக்கம் ஆபத்தானது இல்லை. இருப்பினும், மயங்கி விழும்போது எதிர்பாராத விதமாக நமது உடலில் காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே மயக்கம் வரப்போகிறது என தெரிந்தால் நம்மை நாம் கொஞ்சம் பாதுகாத்து கொள்வது நல்லது.

இந்த வேசோவாகல் சின்கோப் என்பது நரம்பு மண்டலத்தின் திடீர் அனிச்சை செயலால் ஏற்படும் ஒருவித 'ரிஃப்ளெக்ஸ் சின்கோப்' (reflex syncope) ஆகும்.
ரத்தத்தைப் பார்க்கும்போது அல்லது திடீரென மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது சிலருக்கு மட்டும் இதுபோல ஏற்படும்.
இதை மருத்துவர்கள் கூறுகிறர்கள் ஒரு சிலருக்கு ரத்ததை பார்க்கும் போது மன அழுத்தம் ஏற்படும். இதனால் தான் ரத்ததத்தை பார்த்தவுடன் வேசோவாகல் சின்கோப் பிரச்சனை உள்ளவர்கள் மயக்கம் டைகிறார்கள்.
