சிலருக்கு இரவு வேளைகளில் நொறுக்கு தீனி சாப்பிடும் பழக்கம் இருக்கும்.
இது போன்ற பழக்கங்கள் உடல் ஆரோக்கியம் தாக்கம் செலுத்தும்.
அதிலும் குறிப்பாக நொறுக்கு தீனிகள் அதிகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களுக்கு உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
இரவு தூக்கத்தை கெடுக்கும் இந்த உணவுகள் செரிமானத்தையும் பாதிக்கும்.
அந்த வகையில், இரவு 10 மணிக்கு மேல் நொறுக்கு தீனி போன்ற உணவுகள் உட்க் கொள்ளும் பொழுது என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
10 மணிக்கு மேல் தவிர்க்க வேண்டிய உணவுகள்
1. காப்ஃபைன் நிறைந்த உணவுகளை மாலை 6 மணிக்கு மேல் உட்கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனின் காப்ஃபைன் உணவுகள் இரவு நேர தூக்கத்தை இல்லாமலாக்கிறது. எனவே காப்ஃபைன் நிறைந்த சாக்லேட், டீ, காபி போன்றவற்றை மாலை வேளையில் இருந்தே குடிப்பதைத் தவிர்க்கவும்.
2. எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை இரவு வேளைகளில் மறந்தும் சாப்பிடக் கூடாது. இத்தகைய உணவுகள் வயிற்றில் உப்புசம் பிரச்சினையை ஏற்படுத்தும். அதில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே உடலில் தேங்கி விடும். இதனால் பல விதமான நோய்கள் அபாயம் அதிகரிக்கும்.
3. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் மற்றும் செயற்கை பொருட்கள் அதிகம் உள்ளது. இது வயிற்றில் உப்புசம் மற்றும் செரிமான பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே எளிதில் ஜீரணமாகக்கூடிய முழு தானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
4. ஆல்கஹால் குடித்து விட்டு தூங்கினால் நிம்மதியான தூக்கம் வரும் என பலரும் நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால் மதுபானம் குடிப்பதால் இரவில் ஆழமான தூக்கத்தை தூங்க முடியாது. இது முழு ஆரோக்கியத்திலும் தாக்கம் செலுத்துகிறது.
5. ஐஸ்க்ரீம், குக்கீஸ், மிட்டாய் மற்றும் பிற சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்கள் தற்காலிகமாக இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தும். இதனால் இரவு நேரங்களில் இப்படியான உணவுகளை தடுக்க வேண்டும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் பழக்கமாகும்.
6. சோடா போன்ற கார்பனேட்டட் பானங்கள் வயிற்று உப்பு, வாயு தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தி, இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும். இதனால் சிலருக்கு ஏப்பம் மற்றும் வயிற்று அசௌகரியம் ஏற்பட்டு இரவு முழுவதும் தூங்க முடியாத நிலை இருக்கும்.