பொதுவாக திருமணம் என்பது நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனையாக அமைகிறது.
மற்ற விஷேசங்களை விட திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நாளாக மாறுகின்றது. ஆனால் அனைவருக்கும் இந்த நாள் மகிழ்ச்சியான நாள் என்பது சற்று சந்தேகமாகவே உள்ளது.
திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் உணர்ச்சி ரீதியாகவும், மனம் ரீதியாகவும் சேர்ந்திருக்க வேண்டும். இப்படி இருந்தால் மட்டுமே திருமண வாழ்க்கை நிலைக்கும். உறவில் மகிழ்ச்சி இல்லாத போது அது நாளடைவில் விவாகரத்தில் சென்று முடியும்.
அதில் சிலர் மாத்திரமே விவாகரத்திற்கு பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி திருமணம், விவாகரத்து, இரண்டாவது திருமணம் ஆகியவற்றில் ராசிகள் மற்றும் கிரக நிலை தாக்கம் செலுத்துக்கின்றதாக கூறப்படுகின்றது.
அந்த வகையில் திருமண வாழ்க்கை நிலைக்காத ராசிகள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் திருமண வாழ்க்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அத்துடன் துணையிடம் நிறைய விடயங்களை எதிர்பார்ப்பார்கள். அது கிடைக்காத பட்சத்தில் இவர்களின் விவாகரத்து பெற்றுக் கொள்வார்கள். திருப்தி இல்லாத உறவில் நீண்ட காலம் இருக்க மாட்டார்கள் எனவும் கூறப்படுகின்றது.
2. துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் தன்னுடைய துணை மீது நல்லிணக்கத்தையும் சமநிலையையும் மதிக்கிறார்கள். அவர்களுக்கான சமநிலையையும் நல்லிணக்கத்தையும் வழங்காத பட்சத்தில் விவாகரத்து செய்து கொள்வார்கள். திருமண வாழ்க்கையில் தன்னுடைய துணை என்ன விரும்புகிறார் என்பதனை தெரிந்து கொண்டு செயற்படுவது அவசியம்.
3. விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தீவிர உணர்ச்சி ஆழம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் துணையை பாராட்டமாட்டார்கள். துணையில் ஏதாவது சிறிய குறை இருப்பின் அவர்களை ஒதுக்கி வைக்க வாய்ப்பு உள்ளது.