பொதுவாகவே ஆயுர்வேதத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்துகள் இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.
ஆயுர்வேதத்தில் இருக்கும் விசேடம் என்னவென்றால் பக்கவிளைவுகள் இன்றி நோய்களை குணப்படுத்த முடிகின்றமையே ஆகும்.
இந்தவகையில் பல்வேறு உடல் நலப்பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் அருமருந்தான மூலிகை இலைகளை நாம் பக்கத்தில் வைத்துக்கொண்டே அதன் அருமை தெரியாமல் இருக்கின்றோம்.
குறித்த சில மூலிகை இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நமது உடலில் ஏராளமான மாற்றங்களை செய்கின்றது. இவ்வாறான மூலிகை இலைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகளுக்கு சிறந்த தீர்வு கிடைக்கின்றது.
கறிவேப்பிலை மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்லது.
சித்த மருத்துவத்தில் கறிவேப்பிலைக்கு தனி இடம் உண்டு. இவை தோலின் நிறத்தையும் பொலிவுடன் வைத்திருக்க உதவுவதுடன், இளநரையையும் தடுக்கும்.
அதேபோல் இந்த கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் அஜீரண கோளாறு நீங்கும், ரத்த சிவப்பணுக்களின் அளவும் அதிகரிக்கும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவுவை சீராக பேணுவதில் இது முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஒரு கிளாஸ் தண்ணீரில், சில புதினா இலைகள், எலுமிச்சம் சாறு கலந்து அப்படியே இரவு முழுவதும் விட்டுவிட்டு மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடித்தால் உடல் பருமன் குறையும்.
ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதுடன் வாய் துர்நாற்றத்தை குறைக்கும், சருமத்தில் இருக்கும் துளைகளை இருக்கமாக்கும்.
எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு வெறும் வயிற்றில் புதினா இலைகளை சாப்பிடுவது சிறந்த பலனை கொடுக்கும்.
காலையில், வெறும்வயிற்றில் துளசி நீரை குடித்து வந்தால், எந்த நோயும் அண்டாது. இதனால், தோல்சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும், பார்வை குறைபாடு நீங்கும்.
இது உடலுக்கு புத்துணர்வு வழங்கி நாள் முழுவதும் உங்களை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள உதவும்.
வெற்றிலை சக்திவாய்ந்த வலி நிவாரணியாக செயற்படுகின்றது. மேலும் செரிமானத்தை மேம்படுத்துகிறது, முகப்பருவை நீக்குகிறது, பசியை அதிகரிக்கிறது.
வெறும் வயிற்றில் வெற்றிலை சாப்பிடுவது வாய் துர்நாற்றத்தை போக்க பெரிதும் துணைப்புரியும்.
வேப்பிலை மஞ்சள் காமாலை ஆபத்தை நீங்குவதுடன், கல்லீரலில் ஏற்படும் தொந்தரவையும் சரி செய்துவிடும்.
வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக்கும். வயிற்று பூச்சிகள் வெளியேறி, வயிறு சுத்தமாகும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கின்றது. இயற்கையாகவே நோய் கிருமிகளிலிருந்து உடலை பாதுகாக்க வேப்பிலை பெரிதும் உதவுகின்றது.