ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான் ஜோதி வடிவானவர் இன்று இந்து மதத்தில் குறிப்பிடப்படுகின்றது.
இந்துக்களை பொருத்த வரையில் சிவபெருமான் கடவுள்களின் கடவுள் என கொண்டாடப்படுகின்றார்.
படைத்தவருக்கு அழிக்கவும் தெரியும் என்பதை அனைவரும் உணர்ந்தால் இறைவனால் நடக்காத விடயம் எதுவும் இருக்கமுயடியாது என்பதும் அறிவுக்கு புலப்படும்.
இந்த வகையில் இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து திங்கட்கிழமைகளில் விரதம் இருந்து சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் இறைவன் மகிழ்ந்து நமது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுவார் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒவ்வெரு தெய்வத்துக்கும் ஒரு சிறப்பு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்படி சிவபெருமானுக்கு உகந்த தினமாக திங்கட்கிழமையில் செய்யப்படும் சிறப்பு பூஜை வழிபாடுகள் உங்கள் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும் என நம்பப்படுகின்றது.
திங்கட்கிழமையில் சிவனுக்கு விரதம் இருப்பதால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.நிதி பிரச்சிகைள் கடன் தொல்லைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஜாதகத்தில் சனி தோஷம் இருப்பலர்கள் திங்கட்கிழமைகளில் செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் சிறிது கருப்பு எள்ளைப் போடவும். அதன் பிறகு, 'ஓம் நம சிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்து, சிவனுக்கு இந்த நீரை அபிஷேகம் செய்ய வேண்டும்.
வாழ்வில் தொடர்ச்சியாக துன்பங்களை அனுபவிக்கின்றீர்கள் என்றால் அரிசி மாவை சிறு உருண்டைகளாக செய்து 'ஓம் நம சிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தப்படி ஒவ்வொரு திங்கட்கிழமையும் மீன்களுக்கு உணவாக கொடுக்க வேண்டும்.
இந்த பரிகாரத்தை ஒவ்வொரு திங்கட்கிழமையும் தொடர்ச்சியாக செய்துவரும் போது அனைத்து பிரச்சினைகளும் விரைவில் இல்லாமல் போவதுடன் குடும்பத்தில் நிம்மதியும் அதிகரிக்கும்.