சிலருக்கு தலையில் வட்ட வடிவில் முடி உதிர்ந்து அந்த இடமே வழுக்கையாக மாறி இருக்கும். இதை தடுக்க சில எளிய முறைகள் பதிவில் கூறப்பட்டுள்ளது.
அலோபீசியா அரேட்டா என்பது ஒரு தன்னுடல் தாக்க நோயாகும். இந்த நோயால் தாக்கபட்டால் அது உடலின் நோயெதிர்ப்பு மயிர்கால்களை தாக்கி முடி உதிர்தலை ஏற்படுத்தும்.
இதை வழுக்கை என கூறுவார்கள். இது தான் ஒரு தன்னுடல் தாக்க நோய் (Autoimmune Disorder)எனப்படுகின்றது. இதில் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தவறாக செயல்பட்டு, முடி வளர உதவும் ஹேர் பாலிக்கிள்களை (Hair Follicles) எதிர்த்து தாக்குகிறது.
இதன் காரணமாக தலை, தாடி அல்லது உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் திடீரென வட்ட வடிவில் முடி உதிர்தல் ஏற்படும். இதற்கு மருத்துவ ரீதியாக மருத்துவ சிகிச்சை இருப்பினும் ஒரு சில வீட்டு வைத்தியம் இதை இல்லாமல் செய்ய சிகிச்சை கொடுக்கும்.

இதற்கு வீட்டில் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி முடி கொட்டிய இடத்தில் மற்றும் உச்சந்தலையில் மசாஸ் கொடுக்க வேண்டும்.
இந்த தேங்காய் எண்ணெய்யில் ரோஸ்மேரி, லாவெண்டர், சிடார்வுட், மிளகுக்கீரை அல்லது தைம் ஆகியவற்றை போட வேண்டும்.
இவை உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர்க்கால்களுக்கு ஊட்டச்சத்து விநியோகத்தை மேம்படுத்துகிறது. இதனால் அந்த இடத்தில் முடி வளரும்.

வெங்காயச் சாறு நீண்ட காலமாக முடி உதிர்தலுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருந்து வருகிறது. வெங்காயத்தில் சல்பர் நிறைந்துள்ளது, இது கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கிறது.
இதனால் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். உச்சந்தலையில் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் மற்றும் கோட்பாட்டளவில் செயலற்ற நுண்ணறைகளைத் தூண்ட உதவும்.
எனவே வெங்காய சாறு எடுத்து அதை வழுக்கை விழுந்த இடங்களில் பூசி பின் குளித்து வர வேண்டும். இப்படி செய்தால் முடி வளரும்.

ஊட்டச்சத்து மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் முடி வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் புரதங்கள் நிறைந்த ஒரு சீரான உணவு ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
எனவே நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் அறுசுவை மட்டும் இருந்தா போதாது. சத்தான சாப்பாடும் சேர்த்து சாப்பிட வேண்டும். எனவே உணவிலும் மாற்றம் அவசியம்.
