சனி மற்றும் புதன் பகவான் இருவரும் வக்ர நிவர்த்தி அடைகின்றனர் இதனால் ஐந்து ராசிகள் பயன் பெறுகின்றனர்.

நவம்பர் 2025 இறுதியில் சனி மற்றும் புதன் பகவான் இருவரும் வக்ர நிவர்த்தி அடைய உள்ளனர். இவர்கள் மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வரும் சனி பகவான் நவம்பர் 28 காலை 9:20 மணி முதல் நேர்கதி அடைய உள்ளார்.

இந்த பெயர்ச்சி சுமார் 4.5 மாதங்களாக சனியின் வக்ரப் பெயர்ச்சியினால் தொழில், உத்தியோகம் வாழ்க்கையில் ஏற்பட்ட மந்த நிலை பிரச்சனைகளை இல்லாமல் செய்ய உள்ளது. 

அதேபோல் நவம்பர் 30-ஆம் தேதி புதன் பகவானும் வக்ர நிவர்த்தியடையுள்ளார். இதனால் வாழ்வில் இருந்த குழப்பங்கள், வணிகத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கி தெளிவும், வேகமும் பிறக்க உள்ளது.

இந்த நிலையில் தற்போது இதன் மூலம் பயன் பெறும் ராசிகள் யார் என்பதை பார்க்கலாம். 

சனியுடன் கைகோர்க்கும் புதன் - கூடை கூடையாய் பணத்தை அள்ளபோகும் ராசிகள் | Sani Bhuthan Direct Motion Rasi Palan 2025 Nov 30

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வணிகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

புதிய சொத்துக்கள் வாகனம் வாங்கும் யோகம் கைகூடும்.

குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.

உடல்நலக் கோளாறுகள் நீங்கும்.

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும்.

குழந்தை பாக்கியம் தொடர்பான முயற்சிகள் வெற்றிபெறும்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் குறைந்து, பணவரவு அதிகரிக்கும்.

தொழிலில் லாபம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.

ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். 

மீனம்

மீன ராசியில் சனி பகவான் நேர்ததியில் செல்ல இருப்பதால் கடந்த சில மாதங்களாக தடைபட்டு நின்ற வேலைகள் வேகமெடுக்கும்.

நிதி நிலைமை சீராகி லாபம் கிடைக்கும்.

ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள், மாற்றங்கள் ஏற்படும்.

அறிவாற்றல் மற்றும் புத்திக்கூர்மை மேம்படும்.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றம் காணப்படும்.

நிதி நிலை சீராகும். பொருளாதார ஸ்திரத்தன்மை கிடைக்கும்.

சேமிப்புத் திறன் அதிகரிக்கும்.