சிலரின் வாழ்க்கையில் பிறந்த நேரம், திகதி, கிழமை, ராசி என அனைத்தும் விளையாடும்.

“கட்டம் சரியில்லையென்றால் உனக்கு நல்லது நடக்காது..” என முன்னோர்கள் அடிக்கடி கூறுவார்கள். கட்டம் சரியில்லை என அவர்கள் எதை கூறுகிறார்கள் என்பதை தெரிந்திருக்க வேண்டும்.

ஜோதிடம்படி, ஒருவர் பிறந்த நேரம், திகதி, கிழமை ஆகியன அவரின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகிறது. அவர்களின் ஆளுமைகளை இது போன்ற தகவல்களை வைத்தே கணித்துக் கொள்ளலாம்.

பிறந்த மாதங்களை வைத்துக் கூட மனிதர்கள் எப்படியானவர்கள் என்பதை கணிக்கலாம்.

அப்படியாயின், குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் நிஜ வாழ்க்கையில் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள். மற்றவர்கள் என்ன தான் முயற்சித்தாலும், குறிப்பிட்ட சில விடயங்கள் அவர்கள் கிடைக்காது. இந்த பதிவில் நிஜ வாழ்க்கையில் ராஜாக்களாக சுற்றித்திரியும் நபர்கள் பிறந்த மாதங்களை பார்க்கலாம்.      

நிஜ வாழ்க்கையில் சொர்க்கத்தை பார்க்கும் அதிர்ஷ்டம்: எந்த மாதங்களில் பிறக்கணும்? | Which Months Born Are To Become Champions

ஜனவரி மாதம்

  • மற்றவர்களை விட ஜனவரி மாதம் பிறந்தவர்கள் ஒழுக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள தன்னுடைய இலக்கில் மிகக்கவனமாக இருப்பார்கள். பணிச் செய்யும் இடத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. சகல துறைகளிலும் பிரபலமானவர்களாக இருப்பார்கள். 

ஜூலை மாதம்

  • 12 மாதங்களில் ஜூலை மாதம் பிறந்தவர்கள் வசீகரமாக இருப்பார்கள். இயற்கையாகவே இவர்களிடம் உள்ள தலைமைத்துவ பண்புகள் அவர்களின் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். தோல்வியை பார்த்து முகம் சுழிப்பவர்கள் இவர்கள் அல்ல. அசைக்க முடியாத அளவு தன்னம்பிக்கையுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களை அதிகமாக வெற்றியாளர்களாகவே பார்க்கலாம்.  

நிஜ வாழ்க்கையில் சொர்க்கத்தை பார்க்கும் அதிர்ஷ்டம்: எந்த மாதங்களில் பிறக்கணும்? | Which Months Born Are To Become Champions

நவம்பர் மாதம்

  • தேவர்களின் தளபதியாக பார்க்கப்படும் இவர்கள் புத்திக்கூர்மை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். கவர்ச்சியான தோற்றம் அவர்களுக்கு துணையாக இருக்கும். என்ன பிரச்சினை வந்தாலும் இலகுவாக சமாளிப்பார்கள். எல்லா துறைகளிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை விட இவர்களிடம் அதிகமான திறமை இருக்கும். இதனால் இவர்கள் நிஜத்திலும் சொர்க்கத்தை காண்பார்கள்.