பொதுவாக பண்டிகை நாட்களில் இனிப்பு பலகாரங்கள் செய்வது வழக்கம்.

அதுவும் தீபாவளி என்றால் வெளிஊர்களில் வேலைச் செய்பவர்கள் கூட வீட்டிற்கு வந்து விடுவார்கள்.

புதிய ஆடை எடுத்து இனிப்புக்களை பரிமாறி, தங்களுக்குள் இருக்கும் உறவை மக்கள் வளர்த்துக் கொள்வார்கள்.

அப்படி இருக்கும் பட்சத்தில் வருடம் வருடம் ஒரே வகையான இனிப்புக்களை செய்யாமல், இந்த வருடம் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சிக்கலாம்.

மக்ரூன், கடலை மிட்டாய் போன்று உலக முழுவதும் பிரபலமாக இருக்கும் தூத்துக்குடி மஸ்கோத் அல்வா செய்து அசத்தலாம்.

தித்திக்கும் தூத்துக்குடி மஸ்கோத் அல்வா- செலவே இல்லாமல் செய்வது எப்படி? | Thoothukudi Famous Muscoth Halwa Diwali Recipe

குறைவான பட்ஜெட்டியில் அல்வாவை செய்து முடிக்கலாம். மென்மையாக மென்று சாப்பிடக் கூடியது இந்த மஸ்கோத் அல்வாவை தூத்துக்குடியில் செய்வது போன்று எப்படி செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.   

தேவையான பொருட்கள்

  • மைதா மாவு
  • கருங்கண்ணு
  • தேங்காய் பால்
  • சர்க்கரை
  • முந்திரி

 செய்முறை

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, தேங்காய் பூ இரண்டையும் ஒன்றாக போட்டு அதனுடன் சர்க்கரை, முந்திரி ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும்.

அதன்பின்னர் தேங்காய் பாலை மைதா மாவுக்கு மேல் ஊற்றி சுமாராக ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர், மைதாவில் இருந்து பாலை மாத்திரம் வடிகட்டி எடுக்கவும்.

தித்திக்கும் தூத்துக்குடி மஸ்கோத் அல்வா- செலவே இல்லாமல் செய்வது எப்படி? | Thoothukudi Famous Muscoth Halwa Diwali Recipe

ஒருநாள் இரவு முழுவதும் மாவை புளிக்க வைத்து எடுத்தால் திக்கான மைதா பால் தயாராகி விடும். அதன்‌ பிறகு ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு சர்க்கரை போட்டு கிளறவும்.

மைதா பால் மற்றும் தேங்காய் பாலை இரண்டையும் கைபோடாமல் கிளறவும். மஸ்கோத் அல்வா சரியான பதம் வரும் வரை கிளறி விட்டு கொண்டே இருக்கவும். கடைசியாக வறுத்த முந்திரி சேர்த்து, ஒரு தட்டில் அல்வாவை ஊற்றி சமப்படுத்தி ஆறவிடவும்.

பரிமாற விருப்பமான வடிவத்தில் அல்வாவை வெட்டிக் கொடுக்கலாம். இதனை சரியாக செய்தால் சுவையான மஸ்கோத் அல்வா தயார்!   

தித்திக்கும் தூத்துக்குடி மஸ்கோத் அல்வா- செலவே இல்லாமல் செய்வது எப்படி? | Thoothukudi Famous Muscoth Halwa Diwali Recipe