பொதுவாக தற்போது இருக்கு நவீன மயமாக்கலினால் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு வேலைப்பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் உடலில் பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதிலும் குறிப்பாக அலுவலங்களில் இருப்போர் எங்கும் அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைப்பார்க்கிறார்கள். இதனால் அவர்களின் உடல் அசைவில்லாமல் நீண்ட நேரம் இருக்கும்.

இவ்வாறு ஏற்படும் நோய்களை “சிட்டிங் டிசீஸ்” என அழைப்பார்கள். பெரியளவிலான பாதிப்புக்கள் இல்லாவிட்டாலும் அன்றைய நாளை மோசமாக்கும் அளவிற்கு பாதிப்பு இருக்கும்.

நீண்ட நேரம் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்யும் நபருக்கு உடலில் ரத்த அழுத்தத்தில் மாறுபாடுகள் உண்டாகும். இதன் விளைவாக காலப்போக்கில் இதய கோளாறுகள், புற்று நோய், நீரிழிவு நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மனநிலை பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றன.

அந்த வகையில் இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் நம்மால் வேலையை மாற்ற முடியாத நிலை இருக்கும். அப்படியானவர்கள் சில உடற்பயிற்சிகள் மற்றும் உணவு மூலம் விளைவுகளை கட்டுபடுத்தலாம்.

அப்படியாயின் உட்கார்ந்து வேலைப்பார்ப்பவர்கள் எப்படியான விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதனை தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.