ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும் அனைவரின் கவனமும் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் மேல் தான் இருக்கும்.
16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பிரெஞ்சு மருத்துவர் மற்றும் புகழ்பெற்ற ஜோதிடர் தான் நோஸ்ட்ராடாமஸ்.
இவர், இதுவரையில் வரலாற்றில் நடந்த முக்கியமான இயற்கை பேரழிவுகள், புரட்சிகள், போர்கள் மற்றும் தாக்குதல்கள் போன்ற முக்கியமான நிகழ்வுகளை அவர் தனது படைப்புகளில் ஏற்கனவே கணித்து குறிப்பிட்டுள்ளார். அவரது படைப்புகளில் இருக்கும் குறியீட்டு மொழிகளில் எதிர்கால கணிப்புகளை காணலாம்.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்கான நிதி சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கு 2025- ஆம் ஆண்டின் ஜோதிட கணிப்புகள் மற்றும் குறிப்பிட்ட ராசிகளின் பண்புகள் பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம்.
நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனங்கள் மர்மங்கள் மற்றும் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய ஒரு தீர்க்கமான பார்வையை வழங்குகின்றன.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோஸ்ட்ரடாமஸின் கணிப்புகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவை என்னென்ன என்பது பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. 2025 ஆம் ஆண்டில் நோஸ்ட்ரடாமஸின் கணிப்புபடி, "உலகின் தோட்டம்" என அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகள் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளம் மற்றும் காலநிலை மாற்றத்தினால் அழிவை சந்திக்கும். சில சமயங்களில் எரிமலை வெடிப்பு கூட ஏற்படலாம்.
2. தென் அமெரிக்காவின் மேற்கு விளிம்பில் உள்ள ஆண்டிஸ் மலைகளில் எரிமலைகள் உள்ளன. அவை வெடித்து அந்த பிராந்தியத்தில் சுற்றுச்சூழலில் இருக்கும் இடங்களை அழிக்கும். இது போன்ற பேரழிவுகள் பிரேசிலில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளை அழிக்கக் கூடும். காலநிலை மற்றும் பல்லுயிர் பெருக்கத்திலும் பெரும் தாக்கங்கள் ஏற்படலாம்.
3. நோஸ்ட்ராடாமஸின் குவாட்ரெய்ன்களின்படி, பிறக்கப்போகும் 2025ஆம் ஆண்டு போர்களும் நோய்களும் ஐரோப்பாவை தாக்கும். அத்துடன் உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நடைபெறும் போர் போன்ற பதற்றங்கள் புவிசார் அரசியல் சூழ்நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
4. சமீபத்தில் உலகையே அச்சுறுத்திய COVID-19 தொற்றுநோய் போன்ற சுகாதார நெருக்கடிகள் ஏற்படலாம்.
5. பூமியையே அச்சுறுத்தும் தீர்க்க தரிசனமாக "காஸ்மிக் ஃபயர்பால்" பார்க்கப்படுகின்றது. நோஸ்ட்ரடாமஸின் கணிப்புப்படி, பூமியை சிறுகோள் தாக்கும் என கூறப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டில் ஒரு சிறுகோள் பூமியை அச்சுறுத்தும் எனக் கூறியுள்ளார். ஆனால் அது உண்மையில் நடந்தால், பூமியில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.