நாளைய தினம் அம்மன் வழிபாட்டிற்குரிய ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சம் பெறும் நாளையே நாம் ஆடிப்பூரம் என்கிறோம். ஆடிப்பூரம், ஆண்டாள் நாச்சியார் அவதரித்த திருநாளாகும்.
மகாவிஷ்ணுவின் பக்தரான பெரியாழ்வாருக்கு அருள் செய்வதற்காக மகாலட்சுமி தேவியே ஆண்டாளாக அவதரித்ததாகவும், பூமா தேவியின் மறு வடிவம் தான் ஆண்டாள் என்பது புராணங்கள் சொல்கின்றன.
ஆண்டாள் அவதரித்தது ஆடி மாதம் பூரம் நட்சத்திரம், வெள்ளிக்கிழமையில் என சொல்லப்படுகிறது. இந்த நாளையே ஆண்டாள் ஜெயந்தியாக, ஆடிப்பூரமாக நாம் கொண்டாடுகிறோம்.
அதே சமயம் ஆண்டாள், திருமாலை மணந்து, அவருடைய திருவடியில் ஐக்கியமான தினமே ஆடிப்பூரம் என்றும் சொல்லப்படுகிறது.
அந்த வகையில் நாளைய தினம் நம்முடைய வீட்டில் அம்பாளுக்கு முன்பாக வைத்து வழிபட வேண்டிய 3 முக்கியமான பொருட்கள் என்னென்ன என்பதை நாம் இங்கு பார்போம்.
நாளைய தினம் அம்பாளுக்காக வாங்க வேண்டிய பொருட்கள் காதோலை கருகமணி, கண்ணாடி வளையல், மருதாணி.
நாளைக்கு அம்பாளுக்கு வளைகாப்பு என்பதால் நிச்சயம் வளையல் வாங்க வேண்டும். வளைகாப்பு திருமணம் போன்ற எந்த விசேஷமாக இருந்தாலும் பெண்களுடைய மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய பொருள்
மருதாணி
அம்பாளுக்கு நாளைய தினம் இந்த மருதாணியை வைத்து வழிபாடு செய்து விட்டு அந்த மருதாணியை எடுத்து வீட்டில் இருக்கும் பெண்கள் கையில் இட்டுக் கொள்ளலாம். மருதாணி இலையாக வைத்து வழிபாடும் செய்தாலும் சரி, மருதாணியை அரைத்து விழுதாக வைத்து வழிபாடு செய்தாலும் சரி, அது உங்களுடைய சௌகரியம். காதோலை கருகமணி இது மங்கள பொருட்களில் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு பொருள்.
காதோலை கருகமணி
நாட்டு மருந்து கடைகளில், பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் இந்த காதோலை கருகமணி செட் அப்படியே விற்கிறது. ஒரு பிளாஸ்டிக் கவருக்குள் காதோலை, கருகமணிக்கு பதிலாக கருப்பு வளையல், மரத்தால் செய்யப்பட்ட சீப்பு, சின்ன கண்ணாடி இவைகளை விற்கிறார்கள். அதை வாங்கி அம்பாளுக்கு வைத்து பூஜை செய்தால் ரொம்ப ரொம்ப நல்லது. வீட்டில் செல்வ செழிப்பு உயரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்து வந்தது.