மனிதர்களுக்கு எந்தெந்த வயதில் எவ்வளவு நேரம் தூக்கம் முக்கியம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தூக்கம் என்பது ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்றாகும். இரவில் சரியான தூக்கம் இருந்தால் மட்டுமே மறுநாளில் நாம் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.

ஆனால் தூக்கம் வயதுக்கு ஏற்ப மாறுபடவும் செய்கின்றது. அதாவது ஒவ்வொருவரது வயதுக்கு ஏற்ப தூக்கத்தின் நேரமும் மாறுபடுகின்றது.

எந்தெந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | How Much House Sleep Is Recommended By Age

புதிதாக பிறந்த குழந்தை முதல் மூன்று மாதம் வரை நாள் ஒன்றிற்கு சுமார் 14 முதல் 17 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டுமாம்.

அதுவே நான்கு மாதங்கள் முதல் 1 வயது வரை உள்ள குழந்தைகள் நாள் ஒன்றிற்கு சுமார் 12 மணி முதல் 15 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

எந்தெந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | How Much House Sleep Is Recommended By Age

ஒன்று முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகள் நாள் ஒன்றிற்கு 11 மணி முதல் 14 மணி நேரம் வரை தூங்குவது அவசியமாகும்.

மேலும் மூன்று முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் நாள் ஒன்றிற்கு சுமார் 10 முதல் 13 மணி நேரம் தூங்க வேண்டும்.

அதுவே ஆறு முதல் 12 வயது வரையிலாக குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 9 மணி முதல் 11 மணி நேரம் வரை தூங்குவது அவசியம்.

எந்தெந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | How Much House Sleep Is Recommended By Age

13 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் நாள் ஒன்றுக்கு 8 மணி முதல் 10 மணி நேரம் தூங்க வேண்டும்.

மேலும் 18 வயது முதல் 64 வயது உள்ளவர்கள் நாள் ஒன்றுக்கு ஏழு முதல் 9 மணி நேரம் வரை தூங்குவது அவசியமாகும்.

எந்தெந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | How Much House Sleep Is Recommended By Age