கொரோனா நெருக்கடி நிலையில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சை அறிவிப்புக்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக போராட மாநில முதல்வர்கள் ஒன்றுசேர வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
நீட் தேர்வு மற்றும் ஜி.எஸ்.டி. விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
இதில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் கொரோனா பரவல் பஞ்சாப் மாநிலத்தில் மோசமடைந்துகொண்டே செல்வதாகக் கூறினார்.
அத்துடன், இதனைக் கட்டுப்படுத்த 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதைப் போல பிரதமருக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, கொரோனா நெருக்கடி சூழலில் மகாராஷ்டிராவில் பாடசாலைகளைத் திறந்தால் 97 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அம்மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எதிர்வு கூறியுள்ளார்.