உ த்தரபிரதேசத்தின் கான்பூர் அருகே உள்ள ஸ்வரூப் நகரில் அரசு ஆஸ்பத்திரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரியின் இதயநோய் சிகிச்சை பிரிவில் நேற்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உத்தரபிரதேசத்தின் கான்பூர் அருகே உள்ள ஸ்வரூப் நகரில் அரசு ஆஸ்பத்திரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரியின் இதயநோய் சிகிச்சை பிரிவில் நேற்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

ஆஸ்பத்திரியின் தரை தளத்தில் பிடித்த தீ முதல் தளத்துக்கும் பரவியது. இதனால் ஆஸ்பத்திரி முழுவதும் பயங்கர புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் ஆஸ்பத்திரி ஊழியர்கள், நோயாளிகள், பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்தை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அனைவரும் ஜன்னல்கள் வழியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள வேறு 2 ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 வயதான நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த வீரர்கள் ஆஸ்பத்திரியில் பிடித்த தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதற்கிடையே தீ விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து அறிய உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டார்.