திருமணமான தம்பதிகள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று யோசிக்கிறீர்களா? இதற்குப் பின்னால் ஒரே ஒரு காரணம் இருக்கிறது. தாம்பத்தியம். சீக்கிரம் தூங்கச் செல்லும் தம்பதிகளின் ஆயுட்காலம் அதிகரிக்குமாம்.

மேலும் அவர்களின் தாம்பத்தியமும் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது. உடலுறவின் சக்திகள் அற்புதமானவை. உடலுறவு உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இப்போது காலையில் உடலுறவு கொள்வதால் உடலில்..மனதில் ஏற்படும் அதிசய மாற்றங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க...

காலையில் அலாரம் சத்தம் கேட்டால் நம்மில் பெரும்பாலோர் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அந்த ஒலியைக் குறை கூறாமல், காலை நேரத்தை வசதியாகத் திட்டமிடினால் நன்றாக இருக்கும். அழகான காலைப் பொழுதை காதலுக்குப் பயன்படுத்தினால், அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் கழியும். அன்புடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். சில சமீபத்திய ஆய்வுகள் காலை உடலுறவு உங்கள் மனதுக்கு மட்டுமல்ல, உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

1. காலை உடற்பயிற்சிக்கும், உடலுக்கும் தேவையான ஆற்றல் அதிகமாக கிடைப்பதால், தாம்பத்திய உறவு அதிகரிக்கும்.. இந்த நேரம் பிறப்புறுப்புகளுக்கு ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இதனால் தாம்பத்தியம் இனிமையாக இருக்கும்..

2. காலையில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் உற்பத்தியாகும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனால் பளபளப்பான சருமம் கிடைக்கும். தோல் ஆரோக்கியமாகவும் துடிப்பாகவும் மாறும். பிரகாசமாகத் தோன்றும். வயதான அறிகுறிகளைத் தடுக்கிறது.

3. வாரத்திற்கு ஒருமுறை காலையில் உடலுறவு கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இரத்த அழுத்தம் சாதாரணமாக இருந்தால், மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.

4. சமீபத்திய ஆராய்ச்சியின் படி, காலை உடலுறவை விரும்புபவர்கள், ஆக்ஸிடாஸின் என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறார்கள். தம்பதிகள் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க இது பயனுள்ளதாக இருக்கும். மனச்சோர்வைக் குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

5. காலை உடலுறவு இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இரத்த ஓட்டத்திற்கு உதவும் தமனிகளின் வீக்கத்தைக் குறைக்கிறது. இரத்த நாளங்களில் இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. இது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

6. நாள் முழுவதும் உங்களை உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க காலை உடலுறவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைத் தவிர, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் தாம்பத்தியம் பயனுள்ளதாக இருக்கும். உடலில் இம்யூனோகுளோபுலின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க காலை இது உதவுகிறது.

7. தம்பதிகளின் உடல் எடையை குறைக்க ரகசிய காலை உடலுறவு பயன்படுகிறது.. இந்த வகை உடலுறவு 300 கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது.

8. சளி மற்றும் காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.. காலை நேர தாம்பத்திய உறவு சளி மற்றும் காய்ச்சலில் இருந்து பாதுகாக்கிறது. உங்கள் தோல், முடி மற்றும் நகங்களின் அழகை அதிகரிக்க காலை உறவு பயனுள்ளதாக இருக்கும்..

காலையில் உறவு வைத்துக் கொள்ளும் தம்பதியர் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதிகாலையில் உடலுறவு கொண்டு நாளைத் தொடங்குபவர்கள் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஒரு கப் காபியுடன் நாளை ஆரம்பித்து அவசர அவசரமாக அலுவலகத்திற்குத் தயாராகி வருபவர்களை விட, காலைப் தாம்பத்திய உறவுடன் நாளைத் தொடங்குபவர்கள் சுகமாகவும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.