பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்க போவதில்லை என அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பன்னிப்பிட்டி பகுதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க தான் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துது் தெரிவிக்கையில்,
உலகம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெரும் நிலையில் அரசாங்கத்தை குறை கூற முடியாது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு பொலிஸ் அதிகாரியால் ஒரு கறுப்பினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது அமெரிக்க அரசாங்கத்தை எவரும் குறை கூறவில்லை.
அண்மையில் பயணப் பொதிக்குள் கழுத்துவெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திலும் அரசாங்கம் இதனையே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.