பெண்கள் மாதவிடாய் நேரத்தின் போது அவர்கள் நடந்துகொள்ளும் நடத்தைகள் மற்றும் அவர்கள் ஈடுபடும் செயல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதமும் பெண்கள் மாதவிடாய் பிரச்சனையால் சிரமப்படுகின்றனர். இது சிலருக்கு பிரச்சனையாகவும் உள்ளது. மாதவிடாய் பற்றிய போதுமான புரிதல் மக்களிடையே அவசியமான தேவையாக கருதப்படுகின்றது.
கிராமப்புறங்களில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமையலறைக்குள் நுழைவதையோ அல்லது குறிப்பிட்ட உணவுகளை தொடுவதையோ தடுக்கும் கலாச்சார விதிமுறைகள் உள்ளன.
இந்த சமயத்தில் பெண்கள் தங்கள் தலைக்கு குளிப்பதை தடைசெய்து, ஊறுகாய்களைத் தொடுவது அல்லது சாப்பிடுவதை தடுப்பது அல்லது தங்கள் கணவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதை தடுப்பது போன்ற சில கட்டுப்பாடுகள் குடும்பத்தினரால் விதிக்கப்படுகிறது.
ஆகையால் இந்த விழிப்புணர்வை அறிவியல் சான்றுகளின் பின்னனியில் உருவாக்க வேண்டும். ஆனால் இதுபோன்ற மூட நம்பிக்கைகளை நிறுத்த வேண்டும்.
இந்த மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலிகளை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளாமல் இந்த நேரத்ததில் முழுமையான சுகாதார ஆரோக்கியத்தை பற்றி தெரிந்து கொள்வது முக்கியமாகும்.
பெண்கள் இந்த நேரங்களில் அதிக சத்து நிறைந்த உணவை உட்கொள்வதுடன் சுறுசுறு்ப்பாகவும் இருப்பது அவசியம். இதன் போது வயிறு வலி அதிகமாக இருந்தால் அதை அலட்சியம் செய்யாமல் கவனிப்புடன் இருக்க வேண்டும்.