சுக்கிரன் மிதுன ராசியில் பயணிக்கப்போவதால் சில ராசிகளுக்கு பணத்தின் வரவு சக்திக்திக்கு அதிகமாக கிடைக்கப்போகிறது என நம்பப்படுகிறது. ஜோதிடத்தின்படி, நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நகர்கின்றன.
இதனை ஜோதிடத்தில் ‘கிரகப்பெயர்ச்சி’ என்பர். சுக்கிர பகவான் வரும் ஜூன் 12ஆம் தேதி, புதன்கிழமை சூரிய அஸ்தமனத்துக்குப் பின், மாலை 6:37 மணிக்கு, மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.
வரும் ஜூலை 7ஆம் தேதி வரை, இந்த ராசியில் சஞ்சரிப்பார். சுக்கிரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்க முடியும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் வீட்டில் பிரச்சனைகளால் பிரிந்து சென்ற சகோதரர்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் வாழ்க்கைத் துணையுடன், அன்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்வீர்கள். பல நாட்களாக தொழிலில் இருந்த சிக்கல் விலகி பணம் உங்களிடம் வந்து சேரும்.
மிதுனம்
மிதுன ராசியினர் இந்த சுக்கிர பெயர்ச்சியால் நல்ல வாய்ப்புக்களை பெறுவார்கள். இத்தனை நாட்களாக வாயைக் கொடுத்து எதிரிகள் பலரைச் சம்பாதித்து வைத்து மிதுன ராசியினருக்கு, சாந்தமாகி, பொறுமை அதிகரிக்கும் காலம் இதுவாகும்.
இந்த காலத்தில் உங்களது அணுகுமுறை மாற்றத்தால், பணியிடத்தில் வாய்ப்புகள் அதிகரிக்கும். இதனால் உங்கள் சம்பளம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
தனுசு
தனசு ராசிக்காரர்களுக்கு ஒரு நல்ல யோகம் இது. இதுவரையில் உங்களுடன் இருந்த கெட்டது விலகி நல்ல வாய்ப்புகள் வரும்.நீண்ட காலமாக நடக்காமல் இருந்த பணிகள் சரியாகும்.
எதிரிகளாய் மாறிப்போன சுற்றமும் நட்பும் உங்களது நல்ல மனதைப் புரிந்துகொண்டு, பாசத்தைக் கூட்டுவார்கள்.
சண்டை சச்சரவுகளோடு இருந்த கணவன் - மனைவி மீண்டும் புரிந்து மன நிம்மதியுடன் வாழ்வார்கள். பணத்தால் இருந்த அனைத்து பிரச்சனைகளும் விலகி நல்ல சம்பாத்தியத்தை கைப்பற்றி சாதிப்பார்கள்.